குறளரங்க இணையதளத்திற்கு உங்களை இனிதே வரவேற்கிறோம்
11/27/2010

திருக்குறள் அரங்கம் - 6

கம்பன் கழக மகளிர் அணி நடத்தும்

திருக்குறள் அரங்கம் - 6

நாள்:
திருவள்ளுவர் ஆண்டு 2041
27.10.2010 சனிக் கிழமைப் பிற்பகல் 14-00 மணியிலிருந்து 18-00 மணிவரை

இடம்:
கம்பன் கழகம்

6 rue Paul Langevin, 95140 Garges les Gonesse, tél: 01 39 93 17 06

14.00 மணி : செவாலியே சிமோன் யூபர்ட் நினைவேந்தல்

: திருக்குறள் உரை (21 முதல் 250 வரை)

14.30 மணி : 22. ஒப்புரவு அறிதல்
: திருமதி லூசியா லெபோ

15.00 மணி : 23. ஈகை
: திருமதி கோமதி சிவஅரி

15.30 மணி : 24. புகழ்
: கவிஞர் கி. பாரதிதாசன்

16.00 மணி : 25. அருள் உடைமை
: திருமிகு பி. எச். பற்குணராசா (யோகானந்தவடிகள்)

: தேனீர் வழங்குதல்

16.30 மணி : சிறப்புரை
: பேராசிரியர் லெபோ பெஞ்சமின்;
: தலைப்பு
: அக்கரையும் இக்கரையும்

17.30 : சிற்றுண்டி வழங்குதல்

அன்புடன்

திருமதி. சிமோன் இராசேசுவரி (தலைவி)
01 30 38 68 11
திருமதி. ஆதிலட்சுமி வேணுகோபால் (செயலாளர்)
01 48 36 66 85
திருமதி. லெபோ லூசியா (பொருளாளர்)
01 39 86 29 81
11/05/2010

பிரான்சு கம்பன் கழக ஒன்பதாம் ஆண்டு விழா

பாரீஸ் நகரில் பல்கலைகழக நகரில் (Cité de l'Unviersité) இந்தியத் தாயகம் (Maison de l'Inde) என்ற மண்டபத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரான்சு கம்பன் கழகத்தின் 9ம் ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது.

காலை 11 மணி அளவில் பிரான்சு கம்பன் கழகத்தின் தலைவர் கவிஞர் கி.பாரதிதாசன், செயலர் பேராசிரியர் பெஞ்சமின் லெபோ இருவரும் விழாவைத் துவக்கி வைத்தனர்.

பெஞ்சமின் லெபோவின் சிறிய அறிமுக உரைக்குப்பின் புதிய தொகுப்பாளர் சுகுணா சமரசம் அழைப்பு விடுக்க, கம்பன் கழகத்தின் துணைப் பொருளாளர் அசோகன், அசோகன் பிரபா இணையர் மங்கல விளக்குக்கு ஓளி ஊட்டினர். சிவகவுரி கணாநந்தன் தன் இனிய குரலில் கவிச் சக்கரவர்த்தியின் கடவுள் வாழ்த்து, பாவேந்தனின் தமிழ்த் தாய் வாழ்த்து பாட விழா இனிதே தொடங்கியது.

உரை விருந்துகள் :

கம்பன் கழகத்தின் பொதுச் செயலர் செவாலியே சிமோன் யூபர்ட் அனைவரையும் வரவேற்றார். விழாவுக்குத் தலைமை தாங்கிய பண்டிட் அரிஅர சிவாச்சார்யார் கம்பன் புகழ் பாடி உரை ஆற்றினார். ஆசி உரை என்றால் என்ன என்று விளக்கிய அருட்டிரு கணேச. சிவசுத குருக்கள், கம்பன் கழகம் வாழ்க, வளர்க என்று ஆசி கூறி விடை பெற்றார்.

வாழ்த்துரை வழங்க வந்த கவிமணி ச. விசயரத்தினம் கவிதை [^] யிலேயே வாழ்த்தை அமைத்திருந்தது மிகச் சிறப்பாக இருந்தது. சுவிஸ் கம்பன் கழகத்தின் தலைவரும் விஷ்ணுதுர்க்கை அம்மன் ஆலயம் அமைத்து ஆன்மீகப் பணியாற்றி வருபவருமான அருட்பெருந்தகை சரவணபவானந்த குருக்கள் கம்பன் புகழ் பாடிக் கன்னித்தமிழ் வளர்ப்போம் என்று வலியுறுத்திப் பேசினார்.

இந்த ஆண்டு சிறப்புரை வழங்க வந்திருந்தவர் கலை விமரிசகர், எழுத்தாளர், கவிஞர் இந்திரன். 133 அடி உயர வள்ளுவர் சிலையைக் கன்னியாகுமரியில் நிறுவியதன் நினைவாக 133 குறள் அதிகாரங்களுக்குத் தக்கவாறு 133 ஓவியர்களைக் கொண்டு 133 ஓவியங்களை எழுத வைத்துக் கண்காட்சி நடத்தித் தமிழக முதல்வரின் பாராட்டைப் பெற்றவர், புதுச்சேரி மாநிலத்தவர் இவர்.

'கம்பனில் அழகியல்' என்ற தலைப்பில் உரையாற்றிய இந்திரன், 'அல்லையாண்டு அமைந்த மேனி அழகனும் அவளும் துஞ்ச' என்ற வரி ஒன்றை வைத்துக்கொண்டு கம்பனில் எப்படி அழகியல், பண்பாட்டு அழகியல் விளக்கமுறுகிறது என அழகாக விளக்கினார். பண்பாட்டு அழகியலை விளக்கும் போது, பாமர மக்கள் எப்படிப் பாம்படம் என்ற அணிகலன் வழி தமிழ்ப் பண்பாட்டை வளர்க்கிறார்கள் என்பதை எடுத்துச் சொல்லிப் பாவேந்தர் பாடல் ஒன்றையும் பொருத்தமாக தொடுத்துச் சொன்னார். பூக்கொடி, மாங்காய் மாலை... போன்ற நகை நட்டு வழியாகப் பெண்கள் தமிழ் அழகியலை வளர்க்கிறார்கள் என்று சொன்னபோது மகளிர் பக்கம் இருந்து ஏகப்பட்ட ஆமோதிப்புகள். அடித்தட்டு மக்கள் தாம் மொழியை வளர்கிறார்கள் என்பதையும் விளக்கிய கலைவிமர்சகர் இந்திரன், தமிழ்ப் பண்பாட்டைப் பெண்கள் தாம் காப்பாற்ற வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து விடை பெற்ற சமயம் அரங்கம் கை தட்டலால் அதிர்ந்தது.
கலை விருந்துகள் :

காலை நிகழ்ச்சியின் போது, சிவகவுரி கணாநந்தன் மாணவியர் இருவர் வாய் பாட்டுப் பாட மாணவர் ஒருவர் வயலின் வாசிக்க மற்றவர் ஒருவர் தபேலா வாசிக்கக் கச்சேரி கலை கட்டியது. மதிய விருந்துக்குப் பின்னர் கலை விருந்துகள் நடைபெற்றன. செல்வி வியார் ப்பன்னி என்ற பிரான்ஸ் இளம் பெண் ஜதி பிசகாமல், தாளம் தவறாமல், பாவ, அபிநய, முத்திரைகளோடு பரதம் ஆடி ஆச்சரியமூட்டினார்.

இராத சிறீதரன் தம் மாணவியர் இருவருடன் மேடையில் அமர்ந்து இனிய தமிழிசை விருந்து அளித்தார். நாட்டிய கலைமாமணி செலினா மகேசுவரன் மாணவியர் அடுத்தடுத்து நடனங்கள் அளித்து அவையினரை இன்பக் கடலில் ஆழ்த்தினர். கலைமாமணி அருள்மோகன் ஆடற்கலையக நடன மணிகள் மணியான நடனங்களை ஆடிக் களிபூட்டினார்கள். நித்தியா சிவகுமார் திரைப்படப் பாடல்கள் சிலவற்றை அழகாகப் பாடிக் கைதட்டலைப் பரிசாக அள்ளிச் சென்றார்.

பட்டயம், விருதுகள்....:

இந்தியத் தூதரக அதிகாரி வெ. நாராயணன் கம்பன் விழா மலரை வெளியிட்டு, பட்டயம், விருதுகளை வழங்கினார். எழுத்துப் பணிப் பட்டயம் பேராசிரியர் ச.சச்தானந்தம் (இங்குள்ள அண்ணாமலை தொலைதூரக் கல்விக் கழகத்தின் பொறுப்பாளர்) அவர்களுக்கு வழங்கப்பட்டது. மணி விழா வாழ்த்து பெற்றவர் வண்ணைத் தெய்வம். கவிதாயினி எழில் துசியந்தி, கவிதைப் பணிப் பட்டயம் வழங்கப்பெற்றார். கவிதாயினி அருணா செல்வம் படைத்த 'கம்பன் விருத்தத்தில் வைத்த விருந்து' என்ற மரபுக் கவிதை நூல் வெளியிடப்பட்டது. வெளியிட்டவர் பிரியா நாராயணன். இக்கவிதாயினிக்கு யாப்பிலக்கணம் கற்பித்துக் கவிதைப் பயிற்சியும் அளித்த கவிஞர் கி பாரதிதாசன் இந்நூலைப் பற்றி விரிவாகப் பேசிப் பாராட்டினார்.

கவிஞர்கள் கம்பனிடம் கேட்ட கேள்விகள்:

கவிஞர் கி பாரதிதாசன் தலைமை தாங்க, கவிதாயினி சிமோன் இராசேசுவரி, கவிதாயினி சரோசா தேவராசு, கவிஞர் தேவராசு, கவிதாயினி அருணா செல்வம், கவிஞர் பாமல்லன்.... ஆகியோர் ஆளுக்கொரு கேள்விக் கணையைக் கம்பனை நோக்கி வீசினர், கவிதை வடிவில். இந்த நிகழ்ச்சி புதுமையாக விளங்கி மக்களை ஈர்த்தது.

பட்டிமன்றம் :

இறுதி நிகழ்ச்சியாக நடைபெற்ற பட்டி மன்றத்துக்குத் தலைவராகவும் நடுவராகவும் அமர்ந்தவர் பேராசிரியர் பெஞ்சமின் லெபோ. தலைப்பு தீமையால் பெரிதும் திகைக்கச் செய்பவர்: கூனியே ! சூர்ப்பணகையே ! இராவணனே!
கூனிக்குக் குரல் கொடுக்க வந்த திருமதிகள்: சரோசா தேவராசு, லூசியா லெபோ. சூர்ப்பணகை பக்கம் நின்றவர்கள் திருவாளர்கள் பாரீசு பார்த்தசாரதி, சிவப்பிரகாசம்.

திருமதிகள் சிமோன் இராசேசுவரி, ஆதி லட்சுமி வேணுகோபால் இருவரும் இராவணனுக்காக வாதாடினார்கள். பேசிய அனைவருமே சிறப்பாகப் பேசப் பட்டிமன்றம் சூடும் சுவையுமாகத் தூள் பறக்கத் தமக்கே உரிய வெண்கலக் குரல் எடுத்து ஆங்காங்கே நகைசுசுவைச சரம் தொடுத்துப் பட்டிமன்றத்தை நடத்திச் சென்றார் பேராசிரியர். சூர்ப்பணகை செய்த தீமை அவள் குலத்தை மட்டுமே நாசம் செய்தது; ஆனால் கூனியோ மூன்று உலகினுக்குமே இடுக்கண் மூட்டியவள்; மேலும் 'இன்னல் செய் இராவணன் இழைத்த தீமை போல்' என்று கம்பன் கூறி இராவணனுக்குச் சமமாகக் கூனியை நிறுத்துகிறான். ஆகவே, சூர்ப்பணகையை மன்றத்தில் இருந்து நீக்கி விடுவதாக நடுவர் அறிவித்தார். பிறன் மனையை நயந்த தீமையைச் செய்தவன் இராவணன். அந்தத் தீமைக்கு முதல் காரணமாக அடிப்படைக் காரணமாக அமைவது கூனியின் தீமையே.
மேலும் இராமாயணத்தின் முதன்மைப் பாத்திரங்கள் இராமன், சீதை, இராவணன் மூன்றுமே கூனியின் தீமையைத்தான் நினைவு கூர்ந்து சுட்டிக்காட்டிப் பேசுகிறார்கள். ஆகவே தீமையால் பெரிதும் திகைக்கச் செய்பவர் கூனியே என்று தீர்ப்பு வழங்கினார் நடுவர். இதற்கும் மேலான இன்னொரு தீர்ப்பு இருக்கிறது என்று தொடர்ந்த பேராசிரியர், 'தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ' என்ற பாரதியின் வரியை எடுத்துக் காட்டி அதனால்தான் தீமை எவ்வளவு சிறிதாக் இருந்தாலும் அதனை வளர விடாமல் உடனடியாக அணைத்துவிடவேண்டும்; இல்லெனில் வெந்து மடியும் காடு. பல இடங்களில் தீ வைத்து இந்தக் கருத்தை வள்ளுவர் வலியுறுத்துகிறார்: 'தீயவை தீய பயத்தலால் தீயவை தீயினும் அஞ்சப் படும்' என்று. எனவே நம் உள்ளத்தில் தீமையின் சிறு பொறியும் எழாதவாறு விழிப்பாக இருப்போம்; இருக்கவேண்டும் என்பதையே இந்தப் பட்டிமன்றத்தின் உச்சத் தீர்ப்பாகப் பேராசிரியர் அறிவித்தார்.

பிரான்சு கமபன் கழத்தின் பொருளாளர் தணிகா சமரசம் நன்றி கூற விழா இனிதே முடிந்தது.

நிகழ்ச்சியில் பங்கேற்றோருக்கு அருமையான உணவை சமைத்து வழங்கினர் குணசுந்தரி பாரதிதாசன் மற்றும் வாணி மூர்த்தி ஆகியோர்.

நன்றி தட்ஸ்தமிழ்.காம்
10/24/2010

கம்பன் விழா 2010

10/12/2010

திருக்குறள் அரங்கம் - 5

கம்பன் கழக மகளிர் அணி நடத்தும்

திருக்குறள் அரங்கம் - 5

நாள்:
திருவள்ளுவர் ஆண்டு 2041
17ஃ10ஃ2010 ஞாயிற்றுக் கிழமைப் பிற்பகல் 14-00 மணியிலிருந்து 18-00 மணிவரை

இடம்:
கம்பன் கழகம்
6 rue Paul Langevin
95140 Garges les Gonesse
tél: 01 39 93 17 06


13.00 மணி : மாணவ மாணவியர் திருக்குறள் வகுப்பு
: செவாலியே சிமோன் யூபர்ட்

14.00 மணி : சொற்பொழிவு
: திருமிகு சி. சிவகுமார்
: தலைப்பு
: பெண்ணியப் பார்வையில் திருக்குறள்

: தேனீர் வழங்குதல்

15.00 மணி : பாட்டரங்கம்
: தலைப்பு
: தேமதுரத் தமிழோசை ......

: திருக்குறள் உரை (201 முதல் 250 வரை)

: 21. தீவினை அச்சம்
: திருமதி சுகுணா சமரசம்

15.30 மணி : 22. ஒப்புரவு அறிதல்
: செவாலியே சிமோன் யூபர்ட்

16.00 மணி : 23. ஈகை
: திருமதி கோமதி சிவஅரி

16.30 மணி : 24. புகழ்
: திருமதி பிரபாவதி அருட்கண்ணன்

17.00 மணி : 25. அருள் உடைமை
: திருமிகு பி. எச். பற்குணராசா (யோகானந்தவடிகள்)

17.30 மணி : சிற்றுண்டி வழங்குதல்

அன்புடன்

திருமதி. சிமோன் இராசேசுவரி (தலைவி)
01 30 38 68 11
திருமதி. ஆதிலட்சுமி வேணுகோபால் (செயலாளர்)
01 48 36 66 85
திருமதி. லெபோ லூசியா (பொருளாளர்)
01 39 86 29 81

KAMBANe KAJAGAM - FRANCE
6, rue Paul Langevin, 95140 Garges les Gonesse, France
www.kambane.com e.mail: kambane2007@yahoo.fr
9/27/2010

திருக்குறள்

திருக்குறள் (Thirukkural) உலகப்புகழ் பெற்ற தமிழ்">தமிழ் இலக்கியமாகும். இதனை இயற்றியவர் திருவள்ளுவர்">திருவள்ளுவர். இதில் 1330 குறள் வெண்பா">குறள்கள் பத்து பத்தாக 133 அதிகாரங்களின் கீழ் தொகுக்கப் பெற்றுள்ளன. இது அடிப்படையில் ஒரு ஒப்பரிய வாழ்வியல் நூல். மாந்தர்கள் தம் அகவாழ்விலும் சுமுகமாக கூடி வாழும் புற வாழ்விலும் இன்பமுடனும் இசைவுடனும் நலமுடனும் வாழத் தேவையான மாறா அடிப்படைப் பண்புகளை விளக்குகிறது. இந்நூல் அறம், பொருள், இன்பம் அல்லது காமம் என்னும் முப்பெரும் பிரிவுகளாய் (முப்பால்) பிரித்தும் அழகுடன் இணைத்தும் கோர்த்தும் விளக்கும் பேரழகுடைய இலக்கியப் படைப்பு.

திருக்குறள் இயற்றப்பட்ட காலம் இன்னும் சரியாக வரையறுக்கப்படவில்லை. இந்நூல் ஏறக்குறைய 2000 ஆண்டு பழமையானது என்று கணிக்கப்படுகிறது. மறைமலை அடிகள்">மறைமலை அடிகள் செய்த ஆராய்ச்சியின் பயனாய், தமிழ்நாட்டில் ஆண்டுகளைக் குறிக்க திருவள்ளுவர் ஆண்டும் பயன்படுத்தப் படுகின்றது. திருவள்ளுவர் ஆண்டு என்பது பொது ஆண்டோடு 31 ஆண்டுகள் கூட்ட வேண்டும்

பழந்தமிழ் நூல்வரிசையில் திருக்குறள்

1. எட்டுத்தொகை,பத்துப்பாட்டு ஆகியவை அடங்கிய பதினென்மேல்கணக்கு

2. பதினெண்கீழ்க்கணக்கு

3. ஐம்பெருங்காப்பியங்கள்

4. ஐஞ்சிறு காப்பியங்கள்


ஆகியவை அவை. அவற்றில், பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் வரிசையில் "முப்பால்" என்னும் பெயரோடு திருக்குறள் விளங்குகின்றது. அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்று பால்களும் கொண்டமையால் "முப்பால்" எனப் பெயர் பெற்றது. முப்பால்களாகிய இவை ஒவ்வொன்றும் "இயல்" என்னும் பகுதிகளாக மேலும் பகுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு இயலும் சில குறிப்பிட்ட அதிகாரங்களைக் கொண்டதாக விளங்குகின்றது. ஒவ்வொரு அதிகாரமும் பத்து பாடல்களைத் தன்னுள் அடக்கியது. இப்பாடல்கள் அனைத்துமே குறள் வெண்பா என்னும் வெண்பா வகையைச் சேர்ந்தவை. அக்காலத்தில் இவ்வகை வெண்பாக்களால் ஆகிய முதல் நூலும் ஒரே நூலும் இதுதான். குறள் வெண்பாக்களால் ஆனமையால் "குறள்' என்றும் "திருக்குறள்" என்றும் இது பெயர் பெற்றது.


"பாயிரம்" என்னும் பகுதியுடன் முதலில் "அறத்துப்பால்" வருகிறது. அதிலும் முதலில் காணப்படுவது , "கடவுள் வாழ்த்து" என்னும் அதிகாரம். தொடர்ந்து, "வான் சிறப்பு", "நீத்தார் பெருமை", "அறன் வலியுறுத்தல்" ஆகிய அதிகாரங்கள். அடுத்துவரும் "இல்லறவியல்" என்னும் இயலில் 25 அதிகாரங்கள்; அடுத்துள்ள துறவறவியலில் 13 அதிகாரங்களுடன் முதற்பாலாகிய அறத்துப்பால் பகுதி முடிவுறுகிறது. அடுத்து வரும் பொருட்பாலில் அரசு இயல், அமைச்சு இயல், ஒழிபு இயல் ஆகிய இயல்கள் இருக்கின்றன. அரசு இயலில் 25 அதிகாரங்கள் உள்ளன. அமைச்சு இயலில் 32 அதிகாரங்களும், ஒழிபு இயலில் 13 அதிகாரங்களும் உள்ளன.


கடைசிப்பாலாகிய "இன்பத்துப்பால்" அல்லது "காமத்துப்பாலி"ல் இரண்டு இயல்கள்; களவியலில் 7 அதிகாரங்களும், கற்பியலில் 18 அதிகாரங்களும் உள்ளன. ஆகமொத்தம் 7 இயல்கள்; 133 அதிகாரங்கள்; 1330 பாடல்கள். திருக்குறளை மொத்தம் 12000 சொற்களில் திருவள்ளுவர் பாடியுள்ளார். ஆனால் இவற்றில் ஐம்பதுக்கும் குறைவான வடசொற்களே உள்ளன.


"அகர முதல வெழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே யுலகு...."

என்று தமிழ் நெடுங்கணக்கின் முதல் எழுத்தாகிய "அ" வில் ஆரம்பித்து, 1330 ஆம் குறளாகிய,

"ஊடுதல் காமத்திற்கின்பம் அதற்கின்பம் கூடி முயங்கப்பெறின்"

என்று தமிழ் மொழியின் கடைசி எழுத்தாகிய "ன்" னுடன் முடித்திருக்கிறார் திருவள்ளுவர்.


வாழ்வியலின் எல்லா அங்கங்களையும் திருக்குறள் கூறுவதால், அதைச் சிறப்பித்துப் பல பெயர்களால் அழைப்பர்: திருக்குறள், முப்பால், உத்தரவேதம், தெய்வநூல், பொதுமறை, பொய்யாமொழி, வாயுறை வாழ்த்து, தமிழ் மறை, திருவள்ளுவம் என்ற பெயர்கள் அதற்குரியவை. கருத்துக்களை இன, மொழி, பாலின பேதங்களின்றி காலம் கடந்தும் பொருந்துவது போல் கூறி உள்ளதால் இந்நூல் "உலகப் பொது மறை" என்றும் அழைக்கப்படுகிறது.

பழங்காலத்தில் இதற்குப் பலர் உரை எழுதியுள்ளனர். அவற்றில் புகழ் வாய்ந்ததாக விளங்குவதும் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டதும் பரிமேலழகர் உரைதான். தற்காலத்திலும் பலர் உரை எழுதியுள்ளனர். அவற்றில் தற்சமயம் சிறப்பாகக் கருதப்படுவது டாக்டர் மு.வரதராசனார் அவர்களது உரை. உலகிலேயே அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள நூல்களில் மூன்றாம் இடத்தைத் திருக்குறள் வகிக்கிறது. இதுவரை 80 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

திருக்குறளின் பால்களும், இயல்களும், அதிகாரங்களும்

திருக்குறளின் 1330 குறள்களும் மூன்று பால்களின் கீழ் தொகுக்கப்பட்டுள்ளன. அவை,

அறத்துப்பால்

பொருட்பால்

காமத்துப்பால்


9/25/2010

திருக்குறள் அரங்கம் - 4


பாட்டரங்கம்

ஞானப் பெண்ணே!

இன்பாவில் பலநாள்கள் ஊறி ஊறி
    இருக்கின்ற எழுத்துக்கள்! சொற்கள்! வண்ண
பொன்காவில் பொலிந்தாடும் மலர்கள் போன்று
    பொருண்ணெறிகள்! அமுதேந்தும் நற்சந் தங்கள்!
வன்...கோ...வில் அரண்மனையில் தங்கம் வைரம்
    வைத்துள்ள கருவூல அணிகள் கொண்டாய்!
என்னாவில் நடைபயின்று தமிழே வாராய்!
    என்னுயிரில் வாழ்கின்ற ஞானப் பெண்ணே!

பற்றுடனே இருப்பதுபோல் நடித்து! காலம்
    பார்த்துநமைக் கால்வாரும் நபரை எல்லாம்
முற்றுடனே நீக்கிவிடு! பகைவர் கட்டும்
        முற்றுகையைத் தூளாக்கு வீரம் நல்கும்!
கற்(று)உடனே நெஞ்சத்துள் நிலைத்து நிற்கும்
    கமழ்கின்ற மதிசு10டு! பாடும் பாவை
பெற்றுடனே மகிழ்ந்தாட தமிழே வாராய்!
    பெரும்புலமை தருகின்ற ஞானப் பெண்ணே!!

சாதியெனும் சகதியினை உடலில் ப10சிச்
    சந்தனமாய் எண்ணுவதோ. வாழ்வைக் காக்கும்
நீதியெனும் தேவதையின் கண்ணைக் கட்டி
    நிலம்பொய்ம்மை ஏந்துவNதூ? வடலூர் வள்ளல்
சோதியெனும் திருப்பாட்டைத் தந்த போதும்
    துயர்க்கடலில் முழுகுவதோ? முன்பி றந்து
ஆதியெனும் புகழ்ஏந்திம் தமிழே வாராய்!
    அறிவொளியை அளிக்கின்ற ஞானப் பெண்ணே!

பகைநாடித் துதிபாடிப் போற்றிப் போற்றிப்
    பழிநாடி வாழ்கின்ற தமிழர்! என்றும்
தொகைநாடித் தொண்டாற்றி இழிவை ஏற்றே
    துயர்நாடி வழிகின்ற தமிழர்! எங்கும்
புகைநாடிப் பொய்நாடி ஊதி ஊதிப்
    பெல்லாத வினையாற்றும் தமிழர் மாற
தகைநாடித் தமிழ்பாட தமிழே வாராய்!
    தன்மானம் தருகின்ற ஞானப் பெண்ணே!

- கவிஞர் கி. பாரதிதாசன்

--------

(அகவல்)

வானுயர் திறனை, மாண்புயர் பண்பினை
மானுடம் நித்தம் வாழ்த்தும் கற்பினை
ஏந்தியே நாளும் எந்நிலை வரினும்
ஏந்திழை காப்பாள், ஏற்றே மகிழ்வாள்!
சுற்றம் பார்த்துச் சுகமே அளித்து
முற்றும் தன்னை முழுதாய்த் தருமோர்
அற்புதம் கண்டும் ஆவலாய் நின்றும்
சொற்களைக் கூட்டிச் சுவையாய்ப் பகிர
உற்றவர் யாரும் உவப்பதும் இல்லை!
பெற்றிடும் பேறு உழைப்பே அன்றிச்
சிறகினை விரித்துச் சிரித்தே வானில்
பறந்து திரியப் பரவசம் எய்திட
உரிமை உண்டோ ஞானப் பெண்ணே!

- கவிதாயினி சிமோன் இராசேசுவரி

(எண்சீர் விருத்தம்)                           

கட்டியெனை வைத்தேன்டி காற்றில் ஆடும்
   காதலெனும் ஆசையையே முற்றும் போக்கி!
தட்டிவிட்டுப் போனதடி தங்கம் என்னைத்
   தொட்டுவிட்டுப் போனபோதே எல்லாம் போச்சி!!
முட்டிமோதும் ஏக்கத்திலே முத்தம் வேண்டி
   மோகத்தில் முணங்கிறேன்டி உன்னைக் கெஞ்சி!
ஒட்டிநின்று ஒறவாட நின்னை வேண்டி
   எட்டிநின்னு பாக்குறியே ஞானப் பெண்ணே!

எத்தனையோ ஆசையுண்டு நெஞ்சில் ஏங்கி
  எப்படிநான் போக்குவேண்டிக் காதல் கன்னி!
அத்தனையும் என்னைவிட்டுப் போக்க வேண்டி
   அத்தமக உன்னிடத்தில் வந்தேன் தாண்டி!
பத்தலையோ நான்பாடும் பாட்டு எல்லாம்
   பாதிதான்டி எடுத்துவிட்டேன் வேண்டாம் மீதி!
மொத்ததையும் பாடிவிட்ட நேரம் போகும்
   முத்தமிடப் பக்கம்வா ஞானப் பெண்ணே!

உப்புபோட்டுத் தின்னுறேன்டி அதனால் வண்டி
   உணர்ச்சிவந்து கூடுதடி நெஞ்சம் தாண்டி!
சப்புகொட்டி அழைக்கிறேன்டி வாச மல்லி
   சாக்குபோக்குச் சொல்லிவிட்டுக் கிட்ட வாடி!
தப்புதண்டா செய்யமாட்டேன் வாடி நம்பி
   தாலிகட்டி தொட்டுடிவேன் சொந்த மாக்கி!
இப்பகொஞ்சம் இனித்திடவே கொடுடீ கொஞ்சி
   இன்பமதை அறிந்திடலாம் ஞானப் பெண்ணே!

- கவிதாயினி அருணாசெல்வம்

(அறுசீர் விருத்தம்)

கருவரை தொடங்கும் வாழ்வு,
கல்லரை முடியும் காலம்,
இருக்கிற வரையில் நாளும்
இனியன நினைந்து செய்யும்
கருமமே துணையாய் நின்று
காத்திடும் நம்மை யெல்லாம்
திருவினை அளிக்கும் என்றும்
செயல்படு ஞானப் பெண்ணே!

அன்பெனும் அருமைப் பண்பும்
அறனெனும் பயனும் கொண்டே
இன்பெனும் கடலில் நீந்தி
இல்லறம் பேணல் வாழ்வாம்!
தன்னெறி பிறழ்ந்து, கொண்டான்
தாழ்நிலை யுறதல் கண்டே,
நன்னெறி உய்க்கச் செய்வாய்
நலமுறு ஞானப் பெண்ணே!

மனைவியும் மக்கள் சுற்றம்
மானமே போக விட்டே
அனைத்தையும் உதறித் தள்ளி
ஆழ்குழி விழுந்த பின்னும்
வினைசெயல் இழந்து நாளும்
வீம்புடன் திரியும், உற்றான்
தனையுமே அழைத்து வந்த,
தாங்குவாய் ஞானப் பெண்ணே

- கவிஞர் தேவராசு

அரியணை இன்பம் கண்டே
அரசியல் வாதி! குள்ள
நரியெனச் சு10து செய்தே
நடிக்கிறார் ஞானப் பெண்ணே!
எரிகிற வீட்டில் மேலும்
எண்ணெயை ஊற்றல் போலாம்
சிரிக்கிற சாதிப் பேயைச்
சீண்டுதல் ஞானப் பெண்ணே!

நாட்டினில் அரசும், பெண்கள்
நலன்தனைக் காக்க வேண்டி,
ஏட்டினில் சட்டம் ஒன்றை
இயற்றலாம் ஞானப் பெண்ணே!
வீட்டினில் பெண்ணைப் பெண்ணே
வெறுத்திடும் நிலையை முற்றாய்
ஓட்டிட வழியும் கண்டால்
ஓங்கலாம் ஞானப் பெண்ணே!

பேதையர் என்றே சொல்லிப்
பெண்களைச் சு10ழ்ந்து நின்ற
வேதனை இருளும் நீங்க,
விடிந்தது ஞானப் பெண்ணே!
சாதனை செய்து வாழ்வில்
சரித்திரம் படைத்தே ஓங்கப்
ப10தலம் அழைக்கு துன்னைப்
புறப்படு ஞானப் பெண்ணே!

- கவிதாயினி சரோசா தேவராசு 
7/31/2010

திருக்குறள் அரங்கம் -2

குறளரங்கப் பாட்டரங்கம் - 2
தேமதுரத் தமிழோசை

எங்கும் தமிழே ஒலிக்கட்டும்!
    இணைந்து தமிழர் உழைக்கட்டும்!
பொங்கும் அமுதத் தமிழ்ச்சீரைப்
    புவியோர் உண்டு களிக்கட்டும்!
அங்கும் இங்கும் நாய்போன்றே
    அலையும் ஆசை அகலட்டும்!
சங்கே முழங்கு! வான்வெளியைத்
    தாண்டும்! தாண்டும்! தமிழோசை!

குளிர்ந்த இளநீர் தருமினிமை!
    கொஞ்சும் குமரி தருமின்பம்!
மலர்ந்த மலர்கள் தரும்சுவைத்தேன்!
    மகிழ்வை ஊட்டும் மழலைமொழி!
வளர்ந்த பலா..மா தரும்கனிகள்!
    வள்ளல் பசுக்கள் தரும்நற்பால்!
விளைந்த பசுமை! அத்தனையும்
    விஞ்சும்! விஞசும் தமிழோசை!

ப+க்கள் மலரும் பேரழகாய்ப்
    புலவர் பாடும் மெல்லோசை!
ஈக்கள் பறந்து தேனுண்டே
    இணையும் சேர்க்கை இன்னோசை!
ஆக்கம் ஊட்டும் ஆற்றலுடன்
    ஆளும் திண்மை வல்லோசை!
ஊக்கம் தந்து தமிழுணர்வை
    ஊட்டும் என்றன் தமிழோசை!

கண்ணன் மீட்டும் குழலோசை!
    காதல் ஊட்டும் வளையோசை!
மன்னன் மாண்பின் மணியோசை!
    மருளை நீக்கும் அருளோசை!
வண்ண மயிலின் அருமோசை!
    சின்னக் குயிலின் குரலோசை!
எண்ணம் நிறைந்தே உயிராக
    இனிக்கும்! இனிக்கும் தமிழோசை!

- கவிஞர் கி. பாரதிதாசன்

(எண்சீர் விருத்தம்)

எண்சீர் விருத்தம்

தேமதுரத் தமிழோசை தென்றலெனத் தழுவித்
  தீPஞ்சுவையாய் இனித்ததுமோர் திகட்டாத காலம்!
பாமரரும் செவிகுளிரப் பாட்டிசைத்து வாழ்வில்
  பசுஞ்சோலை மலராகப் பூத்திருந்த நேரம்!
தாமருந்தும் கூழ்கூடத் தரணியிலே பசியில்
  தவிப்பவர்க்கு முன்வந்து தரத்துடிக்கும் உள்ளம்!
காமத்தீ அவித்துண்மைக் காதலினால் கலந்து
  கண்கவரும் கனியமுதைக் கொஞ்சியவன் தமிழன்!

நாட்டினையே சொத்தாக நாள்தோறும் எண்ணி
  நாடிவரும் அயலவரை நாவினிக்க அழைத்து
வீட்டினிலே உற்றவரை விலக்காமல் காத்;து
  விண்ணவனாய் மண்ணதிலே விளங்கியவன் தமிழன்!
காட்டினிலே உலவுகின்ற கடும்விலங்காய் இன்று
  கட்டறுந்த செயலதனால் கருத்தழிந்தான் ஏனோ! 
காட்டாற்று வெள்ளமெனக் கரைபுரளும் ஆசை
  கவிந்துநின்று அவன்மனதைக் கரைப்பதுவும் ஏனோ!

தாய்மொழியின் உணர்வின்றித் தமிழ்மொழியைச் சிதைத்துத்
  தன்னாட்டின் பெருமைதனைத் தனிநலத்தால் குலைத்து
ஆய்ந்துணரா வகையினிலே ஆன்றோரின் மேன்மை
  அறிந்திடாத நிலைமாற்றி அன்னவனும் இனிமேல்
தீய்ந்துவரும் உறவுகளைத் தேடிவந்து போற்றித்
  தீமைதனை அகற்றியுடன் திருந்துகின்ற நிலையில்
தேய்ந்துவரும் தேமதுரத் தமிழோசை மீண்டும்
  திக்கெட்டும் நாட்டினிலே தேனமுதாய் நிறையும்!

- கவிதாயினி இராசேசுவரி சிமோன


நாடுவிட்டு நாடுவந்த பின்பும் கூட
   நம்மொழியின் மேல்பற்றே உள்ள தையா!
கூடுவிட்டுக் கூடுபாயம் மாயம் போலக்
    குடிகொண்டு பிரென்சுமொழி வந்த தையா!
வீடுவிட்டு வெளிசென்றால் விருப்ப மின்றி
   வேற்றுமொழி பேசியாக வேண்டு மையா! 
கோடுபோட்டு வாழ்ந்தாலும் கொள்கை தன்னை
   கூறுபோட்டு விற்கவேண்டி உள்ள தையா!

மேசைநிறைய புத்தகங்கள் இருந்த போதும்
   மெய்யறிவு படித்திடாமல் வந்தி டாது!
வீசைஎன்ன விலையென்று கேட்டுக் காசை
   வீசியெரிய உண்மையன்பு கிடைத்தி டாது!
ஓசையுடன் பாட்டெழுதிப் படைத்திட் டாலும்
   உள்ளிருக்கும் வாசகங்கள் புரிந்தி டாது!
காசைத்தேடும் உலகத்தில் வாழ்ந்த போதும்;
   கவிதைமொழி தமிழருக்குக் கசந்தி டாது!

நம்மொழியின் மேல்பற்று உள்ள தனால்
   நாட்டமுடன் வந்துமாதம் கூடு கின்றோம்!
எம்மொழிக்கு இணையாக வேற்று மொழி
   இருந்திருந்தால் மனமங்கு சென்று விடும்!
செம்மொழியாய்த் தேமதுரத் தமிழின் னோசை
   செழிப்பாக கேட்டிடவே காத்து நிற்போம்!
இம்முறையும் எந்தமிழின் இனிமை கேட்டு
   இன்பமிதே! வேறில்லை என்று சொல்வோம்!

தென்னவரின் தேமதுரத் தமிழின் ஓசை
   தேடியதைக் காதினிக்கக் கேட்டுக் கொண்டே
அன்னமிடும் குணாவின்கைப் பக்கு வத்தை
   ஆசையுடன் அள்ளியள்ளி உண்ட போதே
விண்ணமுதம் என்பதெல்லாம் விண்ணில் இல்லை
   வீட்டினிலே விருந்தோம்பும் பெண்ணி ருந்தால்
மண்ணுலகில் விண்ணுலகம் வந்து சேர்ந்து
   எண்ணமெல்லாம் தமிழோசை கேட்டே ஆடும்!

- கவிதாயினி அருணா செல்வம்

எண்சீர் விருத்தம்.

தூமணிகள்  பதித்திட்ட  மாடக்  கூடல் 
    தொன்மைஒளிர்  கலைநுட்பம்  விளங்கித்  தோன்றும்
மாமதுரை  நகரினிலே  சங்கம்  வைத்து
    மாமன்னர்  பெரும்புலவர்  பல்லோர்  கூடித்
தேமதுரத்  தமிழினிலே யாத்து  வந்த
    தித்திக்கும்  இலக்கியங்கள்  ஆய்வு செய்து
சேமமுறும்  வழிகளையே  சுட்டிக்  காட்டிச
    செயல்படவே  ஊக்குவிக்கும்  நீதி  நூல்கள்

உலகெங்கும்  வாழ்கின்ற  தமிழர்  கொண்ட
    ஊக்கத்தால்  எத்துறையும்  மேன்மை  கண்டே
நிலைத்திருக்கும்  பைந்தமிழின்  சீர்மை  எல்லாம்
    நிலவுலகில்   எத்திசையும்  பரவச்  செய்தே
கலைமிகுந்த  முத்தமிழின்  கழகம்  தொற்றிக்
    கவின்கலையால்  தமிழோசை  நிரப்பு  கின்றார்
மலையனைய  பெரும்புகழைச  சேர்த்து  நித்தம்
    மாலைகலாய்ச  சூட்டுகின்றார்  எங்கள் தாய்க்கே!

அண்டங்கள்  கோடியதாய்  ஆக்கி  வைத்து
    அகிலங்கள்  உளவாக்கி  ஆட்டு  வித்துக்
கண்டங்கள்  உருவாக்கி  உயிர்கள் யாவும்
    கருத்துடனே  படைத்தனில்  மாந்தர் மட்டும்
பண்புடனே  ஆறறிவும்  அடைந்து நாளும்
    பாங்குடனே  வாழவைக்கும்  தமிழே! தாயே!
தண்ணமுதாம்  தமிழ்மொழியை  நாடு தோறும்
    தழைத்திடச்செய்  ஆற்றலினைத தருவாய்  நீயே!

- கவிஞர் தேவராசு

வெண்பா!

அழகுமிளிர் சந்தநடை ஆழ்ந்தகலைச் சொற்கள்
பழகிவரும் ஓசைஎழில் பைந்தமிழே -யாழும்
குழலும்சே ரேழிசையின் தேமதுர இன்பம்
வழங்கிடும் நற்சீரோங்கும் வாழ்வு!
               
அறுசீர் விருத்தம்

தொட்டில் தன்னில் தாலாட்டும்
    துள்ளும்  குழந்தைக் கிசைப்பாட்டும்
வட்டக் கும்மி எழிபாட்டும்
    வாகாய்க் குழையும் ஒய்ல்பாட்டும்
எட்டி நாற்று நடும்பாட்டும்
    ஏற்ற மிறைக்க ஒருபாட்டம்
சொட்டும் காதல் சுவைப்பாட்டும்
    சுகமாய் உள்ளம் தழுவிடுமே!

பேசும் விதத்தில் சொல்விடையும்
    பேச்சில் உதிக்கும் பழமொழியும்
வீசும் தென்றல் காற்றோடு
    மிதந்து வருடும் தேம்மாங்கும்
ஆசு கவிபோல் யாவர்க்கும்
    அமுதாய்ச சுரந்த இன்பத்தை
காசுக் காகத் தமிழ்விற்கும்
    காலத் தில்நாம் காணலையே!
                                               
- சரோசா தேவராசு .
                                                                                                

 


குறளரங்கம் 7




கோப்புகள்


தெள்ளு தமிழ்நடை,
சின்னஞ் சிறிய இரண்டடிகள்,
அள்ளு தொறுஞ்சுவை
உள்ளுந் தொறும்உணர் வாகும்வண்ணம்
கொள்ளும் அறம்,பொருள்
இன்பம் அனைத்தும் கொடுத்ததிரு
வள்ளுவ னைப்பெற்ற
தாற்பெற்ற தேபுகழ் வையகமே!

வெல்லாத இல்லை
திருவள் ளுவன்வாய் விளைத்தவற்றுள்
பொல்லாத தில்லை
புரைதீர்ந்த வாழ்வினி லேஅழைத்துச்
செல்லாத தில்லை
பொதுமறை யான திருக்குறளில்
இல்லாத தில்லை
இணையில்லை முப்பாலுக் கிந்நிலத்தே!

தொன்னூற் படியில்லை!
திராவிடர் தூய கலைஒழுக்கம்
பின்னூற் படியிற்
பெரும்படி இல்லை! பிழைபடியா
அந்நூற் படிதிரு
வள்ளுவன் தந்தனன் ஆயிரத்து
முந்நூற்று முப்பதும்
முத்தாக மூன்று படியளந்தே!

கன்னல் இதுஎனக்
காட்டியே மக்கள் கடித்துணுமோர்
இன்னல் தராது
பருகுக சாறென ஈவதுபோல்
பின்னல் அகற்றிப்
பிழைதீர் நெறிஇது பேணிர்என்றே
பன்னல் உடையது
வள்ளுவன் முப்பாற் பனுவலொன்றே!

வித்திப் பிழைக்கும்
உழவனும் வேந்தனும் நாடனைத்தும்
ஒத்துப் பிழைக்க
வழிகாட்டி வள்ளுவன் ஓதியநூல்.
எத்துப் பழுத்தவர்
ஏமாற்றும் ஆரியர் நான்மறைபோல்
அத்திப் பழமன்று;
தித்திக்கும் முப்பழம் ஆம்படிக்கே!

-பாவேந்தர் பாரதிதாசன்

பக்க எண்ணி

Blogger இயக்குவது.