குறளரங்க இணையதளத்திற்கு உங்களை இனிதே வரவேற்கிறோம்
9/25/2010

திருக்குறள் அரங்கம் - 4


பாட்டரங்கம்

ஞானப் பெண்ணே!

இன்பாவில் பலநாள்கள் ஊறி ஊறி
    இருக்கின்ற எழுத்துக்கள்! சொற்கள்! வண்ண
பொன்காவில் பொலிந்தாடும் மலர்கள் போன்று
    பொருண்ணெறிகள்! அமுதேந்தும் நற்சந் தங்கள்!
வன்...கோ...வில் அரண்மனையில் தங்கம் வைரம்
    வைத்துள்ள கருவூல அணிகள் கொண்டாய்!
என்னாவில் நடைபயின்று தமிழே வாராய்!
    என்னுயிரில் வாழ்கின்ற ஞானப் பெண்ணே!

பற்றுடனே இருப்பதுபோல் நடித்து! காலம்
    பார்த்துநமைக் கால்வாரும் நபரை எல்லாம்
முற்றுடனே நீக்கிவிடு! பகைவர் கட்டும்
        முற்றுகையைத் தூளாக்கு வீரம் நல்கும்!
கற்(று)உடனே நெஞ்சத்துள் நிலைத்து நிற்கும்
    கமழ்கின்ற மதிசு10டு! பாடும் பாவை
பெற்றுடனே மகிழ்ந்தாட தமிழே வாராய்!
    பெரும்புலமை தருகின்ற ஞானப் பெண்ணே!!

சாதியெனும் சகதியினை உடலில் ப10சிச்
    சந்தனமாய் எண்ணுவதோ. வாழ்வைக் காக்கும்
நீதியெனும் தேவதையின் கண்ணைக் கட்டி
    நிலம்பொய்ம்மை ஏந்துவNதூ? வடலூர் வள்ளல்
சோதியெனும் திருப்பாட்டைத் தந்த போதும்
    துயர்க்கடலில் முழுகுவதோ? முன்பி றந்து
ஆதியெனும் புகழ்ஏந்திம் தமிழே வாராய்!
    அறிவொளியை அளிக்கின்ற ஞானப் பெண்ணே!

பகைநாடித் துதிபாடிப் போற்றிப் போற்றிப்
    பழிநாடி வாழ்கின்ற தமிழர்! என்றும்
தொகைநாடித் தொண்டாற்றி இழிவை ஏற்றே
    துயர்நாடி வழிகின்ற தமிழர்! எங்கும்
புகைநாடிப் பொய்நாடி ஊதி ஊதிப்
    பெல்லாத வினையாற்றும் தமிழர் மாற
தகைநாடித் தமிழ்பாட தமிழே வாராய்!
    தன்மானம் தருகின்ற ஞானப் பெண்ணே!

- கவிஞர் கி. பாரதிதாசன்

--------

(அகவல்)

வானுயர் திறனை, மாண்புயர் பண்பினை
மானுடம் நித்தம் வாழ்த்தும் கற்பினை
ஏந்தியே நாளும் எந்நிலை வரினும்
ஏந்திழை காப்பாள், ஏற்றே மகிழ்வாள்!
சுற்றம் பார்த்துச் சுகமே அளித்து
முற்றும் தன்னை முழுதாய்த் தருமோர்
அற்புதம் கண்டும் ஆவலாய் நின்றும்
சொற்களைக் கூட்டிச் சுவையாய்ப் பகிர
உற்றவர் யாரும் உவப்பதும் இல்லை!
பெற்றிடும் பேறு உழைப்பே அன்றிச்
சிறகினை விரித்துச் சிரித்தே வானில்
பறந்து திரியப் பரவசம் எய்திட
உரிமை உண்டோ ஞானப் பெண்ணே!

- கவிதாயினி சிமோன் இராசேசுவரி

(எண்சீர் விருத்தம்)                           

கட்டியெனை வைத்தேன்டி காற்றில் ஆடும்
   காதலெனும் ஆசையையே முற்றும் போக்கி!
தட்டிவிட்டுப் போனதடி தங்கம் என்னைத்
   தொட்டுவிட்டுப் போனபோதே எல்லாம் போச்சி!!
முட்டிமோதும் ஏக்கத்திலே முத்தம் வேண்டி
   மோகத்தில் முணங்கிறேன்டி உன்னைக் கெஞ்சி!
ஒட்டிநின்று ஒறவாட நின்னை வேண்டி
   எட்டிநின்னு பாக்குறியே ஞானப் பெண்ணே!

எத்தனையோ ஆசையுண்டு நெஞ்சில் ஏங்கி
  எப்படிநான் போக்குவேண்டிக் காதல் கன்னி!
அத்தனையும் என்னைவிட்டுப் போக்க வேண்டி
   அத்தமக உன்னிடத்தில் வந்தேன் தாண்டி!
பத்தலையோ நான்பாடும் பாட்டு எல்லாம்
   பாதிதான்டி எடுத்துவிட்டேன் வேண்டாம் மீதி!
மொத்ததையும் பாடிவிட்ட நேரம் போகும்
   முத்தமிடப் பக்கம்வா ஞானப் பெண்ணே!

உப்புபோட்டுத் தின்னுறேன்டி அதனால் வண்டி
   உணர்ச்சிவந்து கூடுதடி நெஞ்சம் தாண்டி!
சப்புகொட்டி அழைக்கிறேன்டி வாச மல்லி
   சாக்குபோக்குச் சொல்லிவிட்டுக் கிட்ட வாடி!
தப்புதண்டா செய்யமாட்டேன் வாடி நம்பி
   தாலிகட்டி தொட்டுடிவேன் சொந்த மாக்கி!
இப்பகொஞ்சம் இனித்திடவே கொடுடீ கொஞ்சி
   இன்பமதை அறிந்திடலாம் ஞானப் பெண்ணே!

- கவிதாயினி அருணாசெல்வம்

(அறுசீர் விருத்தம்)

கருவரை தொடங்கும் வாழ்வு,
கல்லரை முடியும் காலம்,
இருக்கிற வரையில் நாளும்
இனியன நினைந்து செய்யும்
கருமமே துணையாய் நின்று
காத்திடும் நம்மை யெல்லாம்
திருவினை அளிக்கும் என்றும்
செயல்படு ஞானப் பெண்ணே!

அன்பெனும் அருமைப் பண்பும்
அறனெனும் பயனும் கொண்டே
இன்பெனும் கடலில் நீந்தி
இல்லறம் பேணல் வாழ்வாம்!
தன்னெறி பிறழ்ந்து, கொண்டான்
தாழ்நிலை யுறதல் கண்டே,
நன்னெறி உய்க்கச் செய்வாய்
நலமுறு ஞானப் பெண்ணே!

மனைவியும் மக்கள் சுற்றம்
மானமே போக விட்டே
அனைத்தையும் உதறித் தள்ளி
ஆழ்குழி விழுந்த பின்னும்
வினைசெயல் இழந்து நாளும்
வீம்புடன் திரியும், உற்றான்
தனையுமே அழைத்து வந்த,
தாங்குவாய் ஞானப் பெண்ணே

- கவிஞர் தேவராசு

அரியணை இன்பம் கண்டே
அரசியல் வாதி! குள்ள
நரியெனச் சு10து செய்தே
நடிக்கிறார் ஞானப் பெண்ணே!
எரிகிற வீட்டில் மேலும்
எண்ணெயை ஊற்றல் போலாம்
சிரிக்கிற சாதிப் பேயைச்
சீண்டுதல் ஞானப் பெண்ணே!

நாட்டினில் அரசும், பெண்கள்
நலன்தனைக் காக்க வேண்டி,
ஏட்டினில் சட்டம் ஒன்றை
இயற்றலாம் ஞானப் பெண்ணே!
வீட்டினில் பெண்ணைப் பெண்ணே
வெறுத்திடும் நிலையை முற்றாய்
ஓட்டிட வழியும் கண்டால்
ஓங்கலாம் ஞானப் பெண்ணே!

பேதையர் என்றே சொல்லிப்
பெண்களைச் சு10ழ்ந்து நின்ற
வேதனை இருளும் நீங்க,
விடிந்தது ஞானப் பெண்ணே!
சாதனை செய்து வாழ்வில்
சரித்திரம் படைத்தே ஓங்கப்
ப10தலம் அழைக்கு துன்னைப்
புறப்படு ஞானப் பெண்ணே!

- கவிதாயினி சரோசா தேவராசு 

குறளரங்கம் 7




கோப்புகள்


தெள்ளு தமிழ்நடை,
சின்னஞ் சிறிய இரண்டடிகள்,
அள்ளு தொறுஞ்சுவை
உள்ளுந் தொறும்உணர் வாகும்வண்ணம்
கொள்ளும் அறம்,பொருள்
இன்பம் அனைத்தும் கொடுத்ததிரு
வள்ளுவ னைப்பெற்ற
தாற்பெற்ற தேபுகழ் வையகமே!

வெல்லாத இல்லை
திருவள் ளுவன்வாய் விளைத்தவற்றுள்
பொல்லாத தில்லை
புரைதீர்ந்த வாழ்வினி லேஅழைத்துச்
செல்லாத தில்லை
பொதுமறை யான திருக்குறளில்
இல்லாத தில்லை
இணையில்லை முப்பாலுக் கிந்நிலத்தே!

தொன்னூற் படியில்லை!
திராவிடர் தூய கலைஒழுக்கம்
பின்னூற் படியிற்
பெரும்படி இல்லை! பிழைபடியா
அந்நூற் படிதிரு
வள்ளுவன் தந்தனன் ஆயிரத்து
முந்நூற்று முப்பதும்
முத்தாக மூன்று படியளந்தே!

கன்னல் இதுஎனக்
காட்டியே மக்கள் கடித்துணுமோர்
இன்னல் தராது
பருகுக சாறென ஈவதுபோல்
பின்னல் அகற்றிப்
பிழைதீர் நெறிஇது பேணிர்என்றே
பன்னல் உடையது
வள்ளுவன் முப்பாற் பனுவலொன்றே!

வித்திப் பிழைக்கும்
உழவனும் வேந்தனும் நாடனைத்தும்
ஒத்துப் பிழைக்க
வழிகாட்டி வள்ளுவன் ஓதியநூல்.
எத்துப் பழுத்தவர்
ஏமாற்றும் ஆரியர் நான்மறைபோல்
அத்திப் பழமன்று;
தித்திக்கும் முப்பழம் ஆம்படிக்கே!

-பாவேந்தர் பாரதிதாசன்

பக்க எண்ணி

Blogger இயக்குவது.