9/11/2011
திருக்குறளரங்கம் -14
அன்பிற்கினிய அருந்தமிழ் ஆர்வலர்களே! வணக்கம்!
கம்பன் கழக மகளிரணியினர் திங்கள்தோறும் தொடர்ந்து நடத்திவரும், 'குறள்அரங்கம்', கடந்த 18 .09 .2011 ஞாயிறன்றுக் கம்பன் கழகத் தலைவர், கவிஞர் கி. பாரதிதாசன் அவர்கள் இல்லத்தில் சிறப்பாக நடந்தேறியது. அன்று பிற்பகல் மூன்று மணிக்குத் தொடங்கியபதினான்காம் குறள்அரங்கம் நிகழ்ச்சியில் திருமதி சரோசா தேவராசு அவர்கள், இறைவணக்கம் மற்றும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல்களைப் பாடினார்.
தமிழெனும் அமுதைச் மாந்தத் தங்கள் இல்லத்திற்கு வருகை புரிந்த அனைவரையும் , கவிஞர் கி. பாரதிதாசன் அவர்கள் வரவேற்று இனிய வரவேற்புரை வழங்கினார் . வரவேற்பைத் தொடர்ந்து, திருக்குறளில்,அறுநூற்று ஒன்றாவது குறள் முதல் அறுநூற்று ஐம்பதாம் குறள் வரை,ஐம்பது குறட்பாக்கள் அனைவராலும் படிக்கப்பட்டு, ஐந்து பேர்களால் தனித்தனியாக ஒவ்வோர் அதிகாரத்திற்கும் விளக்கமளிக்கப் பட்டன. 'மடியின்மை' திருமிகு கி.அசோகன் அவர்களாலும், 'ஆள்வினையுடைமை' திருமிகு தணிகா சமரசம் அவர்களாலும்,'இடுக்கண் அழியாமை' திருமதி சரோசா தேவராசு அவர்களாலும், 'அமைச்சு' கவிஞர் கி. பாரதிதாசன் அவர்களாலும்,'சொல்வன்மை' பேராசிரியர் லெபோ பெஞ்சமின் அவர்களாலும் தெளிவாகவும் நல்லபல கருத்துக்களுடனும் அளிக்கப்பட விளக்கவுரைகள் நிறைவைத் தந்தன. அடுத்ததாகச் சிறப்புச் சொற்பொழிவு நிகழ்ச்சியில் "தில்லையும் திருவரங்கமும்" என்னும் தலைப்பில் கவிஞர் கி.பாரதிதாசன் அவர்கள் ஆன்மீகப் பார்வையில் இரண்டு கோவில்களையும் பற்றிய அரிய பல செய்திகளுடன் சொற்பொழிவை
ஆற்றினார்.திருக்குறள் அரங்கின் போதும் சிறப்புச் சொற்பொழிவினைத் தொடர்ந்தும் பேராசிரியர் லெபோ பெஞ்சமின் அவர்கள் எடுத்துக் கூறிய பல செய்திகள் அரங்கிற்கு மேலும் சுவை சேர்த்தன. சிறப்புச் சொற்பொழிவைத் தொடர்ந்து ஒரு சிறிய தேநீர் விருந்திற்குப் பிறகு "கவிதை அரங்கம்" நிகழ்ச்சி களைகட்டியது.
"கனவுகள்" என்னும் தலைப்பில் கவிஞர் கி.பாரதிதாசன் அவர்கள் தலைமையில் , கவிஞர்கள் தங்கள் கற்பனைகளையும் ஆசைகளையும் வண்ண வண்ணக் கனவுகளாய் வடித்துக் காட்டினர். கவிஞர்கள்:லெபோ பெஞ்சமின், வே.தேவராசு,இராசேசுவரி சிமோன்,தணிகா சமரசம, பழ.சிவஅரி, லூசியா லெபோ, சரோசா தேவராசு, லிங்கம் செயமாமல்லன், மதிவாணன், கோமதி சிவஅரி ஆகியோர் கலந்துகொண்டுச் சிறப்பித்தனர் நிறைவாகத் திருமதி குணசுந்தரி பாரதிதாசன் அவர்களின் கைமணத்தில் அன்பையும் கலந்து கொடுத்த இரவு விருந்தில் அனைவருடைய மனமும் வயிறும் நிறைய அன்றைய 'குறள் அரங்கம்' நிகழ்வுகள் இனிதே நிறைவெய்தின.

8/16/2011
திருக்குறளரங்கம் -13
இன்பத் தமிழ் மாந்தும் இனிய அன்பர்களே! வணக்கம்!
பிரான்சுக் கம்பன் கழகம் மகளிரணி தொடர்ந்து நடத்திவரும் 'குறள் அரங்கம்' நிகழ்ச்சியின் பதின்மூன்றாம் நிகழ்வுகள் கடந்த 20.08 .2011 சனிக்கிழமைப் பிற்பகல் மூன்று மணியளவில் திருமிகு தேவராசு திருமதி சரோசாதேவராசு இணையர் இல்லத்தில் (19.Chemin des Pipeaux, 95800.CERGY St CHRISTOPHE ) மிகச் சிறப்பாக நடந்தேறியது. திருமதி. சரோசாதேவராசு அவர்கள் இறைவணக்கம் மற்றும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல்களைப் பாடினார்., திருமிகு வே.தேவராசு அவர்கள் தங்கள் இல்லம் வந்த அனைவரையும் வரவேற்று வரவேற்புரையாற்றினார். கம்பன் கழகத் தலைவர் கவிஞர் கி.பாரதிதாசன் அவர்கள் தலைமையில் கம்பன் கழகச் செயலாளர் பேராசிரியர் லெபோ பெஞ்சமின் அவர்கள் முன்னிலையில் கம்பன் கழக மகளிரணித் தலைவி திருமதி இராசேசுவரி சிமோன் அவர்கள் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார்.இதில், கம்பன்கழகம், கம்பன்கழக மகளிரணி, இளையோரணி உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களும் கலந்துகொண்டுச் சிறப்பித்தனர்.
முதலாவதாக, திருக்குறள் (பொருட்பால்-அரசியல்) 56 ஆம் அதிகாரம் முதல் 60 ஆம்அதிகாரம்வரை வருகைபுரிந்த அனைவராலும் படிக்கப்பட்டு ஐந்து பேர்களால் விளக்கமளிக்கப் பட்டன. கொடுங்கோன்மை என்னும் அதிகாரத்திற்குத் திருமதி.லூசியா லெபோ அவர்களும்,வெருவந்த செய்யாமை என்னும் அதிகாரத்திற்குத் திருமதி.இராசேசுவரி சிமோன் அவர்களும்,கண்ணோட்டம் என்னும் அதிகாரத்திற்குப் பேராசிரியர்.லெபோ பெஞ்சமின் அவர்களும், ஒற்றாடல் என்னும் அதிகாரத்திற்குத் திருமிகு.வே.தேவராசு அவர்களும், ஊக்கம் உடைமை என்னும் அதிகாரத்திற்குக் கவிஞர் கி.பாரதிதாசன் அவைகளும் தத்தமக்கே உரிய நடையில் விளக்கங்களை அளித்துச் சிறப்பித்தார்கள் இல்லத்தார் அளித்த இனிய தேநீர் விருந்திற்குப் பிறகு அடுத்த நிகழ்வாகக் "கவிதை அரங்கம்" நடைபெற்றது.
"வேண்டும் வரம்" என்னும் தலைப்பில் கவிஞர் கி.பாரதிதாசன் அவர்கள் தலைமையில் நடைபெற்றகவிதையரங்கத்தில் ,கவிஞர்கள்:லெபோ பெஞ்சமின், இராசேசுவரி சிமோன், வே.தேவராசு, லூசியா லெபோ, சரோசா தேவராசு, பழ. சிவஅரி, லிங்கம் செயமாமல்லன், சு.மதிவாணன், கோமதி சிவஅரி, குணசுந்தரி பாரதிதாசன் ஆகியோர் கலந்து கொண்டு கவிதைகளை வழங்கினார்கள். கவிச்சித்தர் கண கபிலனார் அவர்கள் தன்னுடைய வாழ்த்துக் கவிதையால் குறள் அரங்கத்தை வாழ்த்திப் பாராட்டினார்கள்.இந்நிகழ்ச்சியை த் தொடர்ந்து 'சிறப்புச் சொற்பொழிவு' நடைபெற்றது.
திருமிகு சு.மதிவாணன் அவர்கள் அன்பின் பல்வேறு நிலைகளையும் இயல்புகளையும் குறித்து 'அன்பு' என்னும் தலைப்பின்கீழ் அழகான, இனிமையான சொற்பொழிவினை நிகழ்த்தினார். திருமதி சரோசாதேவராசு அவர்கள் அன்றைய நிகழ்வுகளுக்கு வந்திருந்து சிறப்பித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.இரவு எட்டு மணிக்குச் சுவையான சிற்றுண்டி விருந்துடன் பதின்மூன்றாம் குறள் அரங்க நிகழ்வுகள் அனைத்தும் இனிதே நிறைவேறின.
6/07/2011
திருக்குறளரங்கம் - 11
அன்புடையீர்! அருந்தமிழ்ப் பற்றுடையீர்! வணக்கம்!
கம்பன்கழக மகளிரணி நடத்தும் குறள்அரங்கம் மற்றும் கவிதையரங்கம் ஆகிய நிகழ்வுகள், கடந்த 18 .06 .2011 சனிக்கிழமைப் பிற்பகல் மூன்று மணி முதல் எட்டு மணிவரை மிகச் சிறப்பாக நடந்தேறியது. வீல்தநேசு நகரில், திரு.சிவஅரி திருமதி.கோமதி சிவஅரி இல்லத்தில் நடைபெற்ற இப் பதினொன்றாம் குறள்அரங்கத்திற்குப் பேராசிரியர் செவாலியே க. சச்சிதானந்தம் அவர்கள் தலைமையேற்றுச் சிறப்பித்தார்கள். பேராசிரியர் சச்சிதானந்தம் அவர்கள் பல நல்ல பிரஞ்சுக் கதைகளைத் தமிழில் மொழியாக்கம் செய்துத் தமிழுக்குத் தொண்டு செய்து வருபவர். இதுவரையில் ஏறக்குறைய எழுநூறுக்கும் மேற்பட்ட கதைகளைத் தமிழில் மொழியாக்கம் செய்து வெளியிட்டுள்ளார். தமிழ், ஆங்கிலம்,பிரஞ்சு என மும்மொழிப் புலமையும், ஆழ்ந்த கல்வி ஞானமும் நிரம்பிய பேராசிரியர் திரு. சச்சிதானந்தம் அவர்கள் தலைமையில், இறை வணக்கம், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல்களுடன் இனிதே தொடங்கின.திரு சிவஅரி அவர்கள், தமது இல்லத்திற்கு வருகை தந்த அன்பர்களை இனிமை பொங்க வரவேற்றார்.
இன்றைய அரங்கில், 46 ஆம் அதிகாரம் முதல் 50 ஆம் அதிகாரம் வரை மொத்தம் 50 குறட்பாக்கள் படிக்கப் பட்டு விளக்கங்கள் அளிக்கப்பட்டன. "சிற்றினம் சேராமை" என்னும் அதிகாரத்திற்குப் பேராசிரியர் லெபோ பெஞ்சமின் அவர்கள், ஆங்கில இலக்கியங்களிலிருந்தும் மேற்கோள்கள் காட்டி விளக்கமளித்தார்கள். அடுத்து, "தெரிந்து செயல்வகை" என்னும் அதிகாரத்திற்குத் திருமதி சிமோன் அவர்களும்,"வலியறிதல்" அதிகாரத்திற்குத் திருமிகு வே.தேவராசு அவர்களும்,"காலமறிதல்" அதிகாரத்திற்குத் திருமதி சரோசா தேவராசு அவர்களும், "இடனறிதல்" அதிகாரத்திற்குத் திருமிகு கி. பாரதிதாசன் அவர்களும் அருமையான முறையில் விளக்கவுரை அளித்தது மிகவும் சிறப்பு. அடுத்து,மாலைச் சிற்றுண்டியுடன் தேநீர் உபசரிப்பிற்குப் பிறகு, பேராசிரியர் சச்சிதானந்தம் அவர்கள் தன்னுடைய பத்திரிக்கை அனுபவங்களையும், தான் எவ்வாறு எழுத்துத் துறைக்கு வந்தார், தனக்குத் தூண்டுகோலாக இருந்தவர்கள் யார்யார் , தன்னுடைய புத்தகங்களின் நோக்கம் மற்றும் தன்னுடைய இளமையின் இரகசியம் போன்றவற்றைப் பற்றி மிகவும் தெளிவாகவும் அழகாகவும்
சுவையாகவும் எடுத்துரைத்த விதம், இன்று எழுத்துலகில் வளரத் துடிக்கும் அனைவருக்கும் நல்ல தெளிவையும் ஊக்கத்தையும் அளிக்கும் வண்ணம் அமைந்திருந்தது.அவருக்கு எங்கள் கம்பன் கழக மகளிரணியின் சார்பில் நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
அடுத்துச் "சிறப்புச் சொற்பொழிவு" நிகழ்வில் திருமதி ஆதிலட்சுமவேணுகோபால்
அவர்கள், வடலூர் அருட்பிரகாச வள்ளலார் அருட்திரு இராமலிங்க அடிகள் அவர்களின் அருள் நெறிகளையும் தொண்டுகளையும் "புரட்சித் துறவி" என்னும் தலைப்பில் சிறப்பானதொரு உரையை நிகழ்த்தினார். பல அரிய செய்திகளையும் விளக்கிக் கூறிய விதம் பாராட்டுக்குரியது.
அடுத்ததாக, மகளிரணி, குறள் அரங்கத்தின் இனிய நிகழ்வாகப் பலரும் ஆவலுடன் பங்குகொள்ளும் "கவிதையரங்கம்" களைகட்டியது. இன்றைய கவிதையின் தலைப்பு "திருவடி"
கம்பன் கழகத் தலைவர் கவிஞர் கி.பாரதிதாசன் அவர்கள் தலைமையில், திருவாளர்கள்:தணிகா சமரசம்,சு.மதிவாணன், கி.அசோகன்,வே.தேவராசு, பழ.சிவஅரி,லிங்கம் செயமாமல்லன், லெபோ பெஞ்சமின் மற்றும் திருமதியர்:சிமோன்,லூசியா லெபோ, சரோசா தேவராசு,சுகுணா சமரசம் ஆகியோர் கவிதைகளை வாசிததனர்.திருமதி அருணா செல்வம் அவர்கள் நிகழ்வுக்கு வரஇயலாத காரணத்தால் அவருடைய கவிதையும் வாசிக்கப்பட்டது.இப்படிப் பலபேர்களையும் கவிஞர்காளாக மாற்றிய பெருமை கவிஞர் கி.பாரதிதாசன் அவர்களையே சாரும். நிறைவாகச் சிறப்பு விருந்தினர் பேராசிரியர் க. சச்சிதானந்தம் அவர்களுக்குக் கம்பன் கழகத் தலைவர்கவிஞர் கி.பாரதிதாசன் அவர்கள் பொன்னாடை அணிவித்துக் , கம்பன் கழகச் சார்பாக வாழ்த்து மடலும் வாசித்தளித்தார். நினைவுப் பரிசாகக் , "கம்பன் மகளிரணி விழா மலர்"மற்றும் "கம்பன் இதழ்" ஆகியவற்றை அளித்துச் சிறப்பித்தார்கள். திரு, திருமதி சிவ அரி குடும்பத்தாருக்கும் பொன்னாடை அணிவித்துக் "குறள் அரங்க" வாழ்த்து மடல் வாசித்தளித்து சிறப்பிக்கப்பட்டது. பின்னர் திரு சிவஅரி அவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்து இரவு விருந்தை ஏற்றுச் செல்லுமாறு அன்புடன் கேட்டுக் கொண்டா. சுவையான இரவு விருந்துடன் பதினொன்றாம் "குறள் அரங்கம்" நிகழ்ச்சிகள் இனிதே நிறைவேறின.

5/15/2011
திருக்குறளரங்கம் - 10
அன்புடையீர்! அருந்தமிழ்ப் பற்றுடையீர்! வணக்கம்.
சரோசா தேவராசு
கடந்த 21 -05 -2011 சனிக்கிழமை பிற்பகல் மூன்று மணியளவில், எண் 21 புல்வார் ழுலியன் தெவோசு, 27200 வெர்நோன். எனும் முகவரியில் உள்ள, திரு.போர் என்செல்வம (கம்பன் கழக செயற்குழு உறுப்பினர்) திருமதி. அருணாசெல்வம் (கம்பன் இதழ் ஆசிரியர், கம்பன் மகளிரணி செயற்குழு உறுப்பினர்) இல்லத்தில் கம்பன் கழக மகளிரணியினர் நடத்தும் பத்தாம் "குறள்அரங்கம்" நிகழ்வுகள் சிறப்பாக நடந்தேறின.
இறைவணக்கம், தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா இனிதே தொடங்கியது.திரு. என்செல்வம் அவர்கள் தம் இல்லம் வந்த அனைவரையும் அன்பாக வரவேற்றார். வரவேற்பைத் தொடர்ந்து முதல் நிகழ்ச்சியாகத் திருக்குறள், பொருளதிகாரம், அரசியல், 41 வது அதிகாரம் "கல்லாமை" தொடங்கி 45 ஆம் அதிகாரம் "பெரியாரைத் துணைகோடல்" ஈறாக, ஐந்து அதிகாரங்கள் வந்திருந்த அனைவராலும் ஒருமித்த குரலில் படிக்கப் பட்டு தனித்தனியாக வொவ்வொரு அதிகாரத்திற்கும் ஒவ்வொருவரால் விளக்கவுரை அளிக்கப் பட்டது. "கல்லாமை" அதிகாரத்திற்குத் திருமதி. சரோசா தேவராசு, "கேள்வி" அதிகாரத்திற்குத் திருமிகு. தணிகா சமரசம், "அறிவுடைமை" அதிகாரத்திற்குத் திருமதி. அருணா செல்வம், "குற்றங்கடிதல்" அதிகாரத்திற்குத் திருமிகு. வே. தேவராசு ஆகியோர் சிறப்பான முறையில் ஆய்வு செய்து விளக்கவுரை அளித்தனர்.
திருக்குறளை அடுத்து, "பொன்னியின் புதல்வன்" என்னும் தலைப்பில் எழுத்தாளர் "கல்கி" யைப் பற்றித் திருமிகு. கி.அசோகன் அவர்கள் பல அரிய செய்திகளையும் கருத்துக்களையும் நம்மோடு பகிர்ந்து கொண்டார். "சிறப்புச் சொற்பொழிவு" அனைவருக்கும் மிகுந்த நிறைவையும் மகிழ்ச்சியையும் தந்தது.
ஒரு சிறிய இடைவேளைக்குப் பிறகு, திங்கள்தோறும் "குறள்அரங்கம்" நிகழ்வுகளின் போது நடைபெறும் "கவிதை அரங்கம்" நிகழ்ச்சி தொடங்கியது இதில் பங்குபெற்ற அனைத்துக் கவிஞர்களும், கம்பன் கழகத் தலைவர், கவிஞர், திரு. கி. பாரதிதாசன் அவர்கள் நடத்தும் கவிதை இலக்கணம் மற்றும் மரபுக் கவிதை எழுதும் பயிற்சிப் பட்டறையில் பயிற்சி பெற்ற கவிஞர்கள் என்பது குறிப்பிடத் தக்கது. "இதயம்" என்ற தலைப்பில் கவிஞர்கள் வாசித்தளித்த எல்லாக் கவிதைகளும் இதயத்தை நிறைத்து இனிக்கச் செய்ததன. இக்கவிதையரங்கத்தில், கவிஞர்கள்:: வே.தேவராசு, பழ சிவஅ, லிங்கம் செயமாமல்லன், தணிகா சமரசம், த.சிவப்பிரகாசம்,திரு. பெல்மோன் பிரகாசு, கோமதி சிவஅரி, அருணா செல்வம், சரோசா தேவராசு, ஆதிலட்சுமி வேணுகோபால் ஆகியோர் கவிதைகளை வாசிக்கத் கவிஞர் கி. பாரதிதாசன் அவர்கள் தலைமைக் கவிஞராக அமர்ந்து அரங்கைச் சிறப்பித்தார். நிகழ்ச்சியின் இறுதியாக, அன்றுத் தம் இல்லத்திற்கு வந்து நிகழ்வுகளில் கலந்துகொண்டுச் சிறப்பித்த அனைவருக்கும் திருமதி அருணா செல்வம் நன்றி கூறினார்.
அன்றைய நிகழ்வுகளில், வழக்கமாகக் "குறள் அரங்கில்" கலந்து கொள்பவர்களோடு வேர்நோன் நகர மக்களும் சேர்ந்து 34 பேர்கள் கலந்து கொண்டுச் சிறப்பித்தனர்.
வந்திருந்த அனைவருக்கும் நிகழ்வுகளின் இடையிடையேயும், இரவு விருந்தாகவும் திரு, திருமதி என்செல்வம் இனையர் விருந்தோம்பல் எல்லோரையும் திக்கு முக்காட வைத்தது. யாருக்கும் வயிறுதான் போதவில்லை.
அவ்வளவு சுவையான விருந்து மற்றும் உபசப்பு.வாழ்க அவர்கள் பனி! வளர்க அவர்கள் இல்லம்!
4/13/2011
திருக்குறளரங்கம் - 9
அன்புடையீர்! அருந்தமிழ்ப் பற்றுடையீர்! வணக்கம்!
பிரான்சு கம்பன் கழகம் நடத்தும் "மரபுக் கவிதை" எழுதும் பயிற்சிப் பட்டறையும், கம்பன் மகளிரணி நடத்தும் குறளரங்கம், கவிதையரங்கம் மற்றும் " சிறப்புச் சொற்பொழிவு ஆகிய நிகழ்வுகள், பிரான்சு கம்பன் கழகத்தின் தலைவர் திரு.கி.பாரதிதாசன் அவர்கள் இல்லத்தில், கடந்த 30.4.2011 சனிக்கிழமை பிற்பகல் இரண்டு மணிமுதல் இரவு ஏழு மணிவரை மிகச் சிறப்பாக நடந்தேறியது.
தமிழ் மரபுக்கவிதைப் பயிற்சிப் பட்டறை:-
தமிழில் மரபுக் கவிதை எழுதுவதற்கான அடிப்படை இலக்கணத்தைக் கம்பன் கழகத் தலைவர் கவிஞர்.திரு.கி.பாரதிதாசன் அவர்கள் நடத்த, திருவாளர்கள்: தணிகா சமரசம், பழ. சிவஅரி, த.சிவப்பிரகாசம், கி.தணிகைவேல், இரா.தணிகைநாத சர்மா, கி அசோகன், லிங்கம் செயமாமல்லன், சிவ.சிவகுமார், ஆதி ஞானவேல், சு.மதிவாணன்; திருமதியர்: ஆதிலட்சுமி வேணுகோபால், கோமதி சிவஅரி, சுகுணா சமரசம், பிரபா அசோகன் ஆகியோர் பயிற்சியாளர்களாகக் கலந்து கொண்டுப் பயன் பெற்றனர்.
இலக்கண வகுப்பைத் தொடர்ந்து, மகளிரணி நிகழ்வுகள் தொடங்கின.
குறள்அரங்கம்:-
இன்றைய ஒன்பதாம் குறள்அரங்கம் நிகழ்ச்சியில் அறத்துப்பால் துறவறவியலில் கடைசி மூன்று அதிகாரங்களும் பொருட்பாலின் முதல் இரண்டு அதிகாரங்களும், வந்திருந்த அனைவராலும் ஒருமித்த குரலில் படிக்கப்பட்டுப பின்னர் ஐவரால் விளக்கமளிக்கப் பட்டன.
விளக்கவுரை அளித்தவர்கள்:
36 ஆம் அதிகாரம் மெய்யுணர்தல்--------- திருமதி. ஆதிலட்சுமி வேணுகோபால்
37 ஆம் அதிகாரம் அவா அறுத்தல்--------திருமிகு. த. சிவப்பிரகாசம்
38 ஆம் அதிகாரம் ஊழ் ---------------------- திருமிகு.ஆதி ஞானவேல்
39 ஆம் அதிகாரம் இறை மாட்சி ----------திருமிகு.தணிகைநாத சர்மா
40 ஆம் அதிகாரம் கல்வி--------------------திரு மிகு.அ.நாகராசு
தேநீர் விருந்திற்குப் பிறகு "கவிதையரங்கம்" நடைபெற்றது.
கவிதையரங்கம்:-
தலைப்பு: "காதல்"
கவிஞர்.திருமிகு.கி.பாரதிதாசன் அவர்கள் தலைமையில் கவிதைமலர் வழங்கியோர்: கவிஞர்கள்; தணிகா சமரசம், த. சிவப்பிரகாசம், கோமதி சிவஅரி, பழ சிவஅரி லிங்கமசெயமாமல்லன், ஆதிலட்சுமி வேணுகோபால், சரோசா தேவராசு, தேவராசு, அருணா செல்வம், கி.பாரதிதாசன், தே.பால்ராசு ஆகியோர் ஆவர். இகவிதை அரங்கில் பங்கேற்ற பதினோரு கவிஞர்களும் மிகச் சிறப்பான கவிகளை வழங்கினர்.. கவிதையரங்க்கைத் தொடர்ந்து "சிறப்புச் சொற்பொழிவு " நடைபெற்றது.
சிறப்புச் சொற்பொழிவு:-
கம்பன் கழகத்தின் பொருளாளர் திருமிகு. தணிகா சமரசம் அவர்கள் "இரத்தம் காட்டும் உண்மைகள்" என்னும் தலைப்பில் மிகச் சிறப்பானதொரு சொற்பொழிவினை ஆற்றினார். இதில் இரத்தத்தைப் பற்றிப் பொதுவாக நமக்குத் தெரிந்திராத பல அரிய செய்திகளைப் பற்றி விளக்கமாக எடுத்துரைத்தார். தேர்ந்த ஞானம் உடைய ஒரு மருத்துவரைப்போல் அவர் விளக்கமளித்த முறை எல்லோரும் புரிந்து கொள்ளும்படி மிகத் தெளிவாக அமைந்திருந்தது என்பது குறிப்பிடத் தக்கது. செவிக்கான உணவைச் சுவைத்த பிறகு, வயிற்றுககான இரவுச் சிற்றுண்டி விருந்துடன் மகளிரணி நிகழ்வுகள் யாவும் இனிதே நிறைவேறின. நிகழ்வுகளில் 35 பேர்கள் கலந்து கொண்டுச் சிறப்புச் சேர்த்தனர்.
அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

40 ஆம் அதிகாரம் கல்வி--------------------திரு

3/31/2011
குறளரங்கம் 8 - கவியரங்கம்
அன்புடையீர்! அருந்தமிழ்ப் பற்றுடையீர்! வணக்கம்.
கடந்த 26.3.2011 சனிக்கிழமை பிற்பகல்,கம்பகழகத்தின் தமிழில் மரபுக் கவிதை எழுதும் பயிற்சிப் பட்டறையும் அதைத் தொடர்ந்துத்கம்பன் கழக "மகளிரணி"யின் "திருக்குறள் அரங்கம்" மற்றும் "கவியரங்கம்" நிகழ்ச்சிகளும் , கம்பன் கழகத் தலைவர், கவிஞர். திரு. கி;பாரதிதாசன் அவர்கள் இல்லத்தில் (கம்பன் இல்லம்) மிகச் சிறப்பாக நடைபெற்றன.
இலக்கண வகுப்பு :2
பிற்பகல் இரண்டு மணிமுதல் மூன்று மணிவரை மரபுக்கவிதை, இலக்கண வகுப்பைத் திருமிகு கவிஞர் .கி; பாரதிதாசன் அவர்கள் நடத்த, திருவாளர்கள்: தணிகா சமரசம், சிவ. சிவகுமார், பழ. சிவஅரி, லிங்கம். செயமாமல்லன், தணிகை வேல், கோபாலகிருட்டிணன் பார்த்தசாரதி, சு. மதிவாணன், பாமல்லன், இரா. இராஜேஷ், கார்த்திகேயன், ஆதிஞானவேல் மற்றும், திருமதியர் : ஆதிலட்சுமி வேணுகோபால், சுகுணா சமாரசம், கோமதி சிவஅரி, தனசெல்வி தம்பி ஆகியோர் பயிற்சியாளர்களாகக் கலந்து கொண்டு பயனடைந்தனர்;
குறள் அரங்கம்:8
இலக்கண வகுப்பைத் தொடர்ந்து, "குறள் அரங்கம்" நிகழ்வு தொடங்கியது; இதில், அறத்துப்பால்,த்துரவரவியல் 31 ஆவது அதிகாரம் முதல் 35 ஆவது அதிகாரம் வரை, அனைவராலும் ஒருமித்த குரலில் வசிக்கப் பட்டன. . ஒவ்வொரு அதிகாரத்திற்கும் தனித்தனியாக ஒவ்வொருவர் விளக்கமளித்தனர்;
விளக்கவுரை அளித்தவர்கள்:
31 ஆவது அதிகாரம், வெகுளாமை.---திருமதி.சரோசா தேவராசு
32 ஆவது அதிகாரம், இன்னா செய்யாமை------திருமதி. அருணா செல்வம்
33 ஆவது அதிகாரம், கொல்லாமை;-----திருமிகு கோபாலகிருட்டிணன் பார்த்தசாரதி
34 ஆவது அதிகாரம், நிலையாமை.-----திருமதி சுகுணா சமரசம்
35 ஆவது அதிகாரம் துறவு -----திருமிகு தேவராசு, ஆகியோர் ஆவர்;
அரங்கத்தில் சுவைஞர்களாக, முப்பத்து மூன்று பேர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.இடையிடையே எழும் சந்தேகங்களுக்குப் பேராசிரியர்; திருமிகு லெபோ பெஞ்சமின் அவர்கள் மிகச் சிறப்பாக விளக்கமளித்தது அரங்குக்கு மேலும் சிறப்புச் சேர்த்தது. பின்னர் சிறிய இடைவேளையில் தேநீர் விருந்து வழங்கப்பட்டது;
கவிதையரங்கம்:
தேநீர் விருந்திற்குப் பின் "கண்கள்" என்னும் தலைப்பில் கவிதையரங்கம் தொடங்கியது; கவிஞர் திரு கி. பாரதிதாசன் அவர்கள் தொகுத்து வழங்கக் கவிஞர்கள்: சரோசா தேவராசு, அருணா செல்வம், பாமல்லன், தேவராசு, இவர்களோடு, தற்போது ,மரபுக்கவிதை இலக்கணத்தைப் பயின்று வரும், திருமிகு தணிகா சமரசம் அவர்களும் திருமதி கோமதி சிவஅரி அவர்களும் கலந்து கொண்டுத் தங்கள் கவிதைகளை வாசித்தார்கள்.கவிஞர் கி; பாரதிதாசன் அவர்களின் கவிதையும் சேர்ந்து நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடந்தது
சிறப்புச் சொற்பொழிவு:
"தமிழர் பகைவர்" என்னும் தலைப்பில் திருமிகு சிவ. சிவகுமார் அவர்கள் ஒப்பாய்வுடன் சிறப்பான முறையில் சொற்பொழிவு ஆற்றினார்.
இரவுச் சிற்றுண்டி விருந்தோம்பலுடன் நிகழ்வுகள் இனிதே நிறைவேறின;
சரோசா தேவராசு
1/12/2011
திருக்குறள் அரங்கம் - 7
அன்புடையீர்! அருந்தமிழ்ப் பற்றுடையீர்! வணக்கம்!
கடந்த 29-01-2011 சனிக்கிழமை பிற்பகல் இரண்டு மணிக்கு, பிரான்சு கார்ழ் லே கொனேசு கம்பன் இல்லத்தில் கம்பன் கழகம் நடத்தும் மரபுக்கவிதை பயிற்சிப் பட்டறை சிறப்பாக நடைபெற்றது. இதில் கம்பன் கழகத் தலைவர் கவிஞர் கி. பாரதிதாசன் அவர்கள் மரபுக் கவிதை இலக்கணம் நடத்தினார். திருவாளர்கள்; கி.அசோகன்,பழ.சிவஹரி,தணிகா சமரசம், சிவ.சிவகுமார், ஆதிஞானவேல், தணிகைநாத சர்மா, பால்ராஜ் தேவராசு, லிங்கம் செயமாமல்லன், கோபால் பார்த்தசாரதி, திருமதியர்;, கோமதி சிவஹரி, சுகுணா சமரசம், ஆதிலட்சுமி வேணுகோபால், தனசெல்வி தம்பி, பிரபாவதி அசோகன் ஆகியோர் பயிற்சியாளர்களாகக் கலந்துகொண்டனர்.
( இவ்விலக்கண வகுப்பு திங்கள்தோறும் இறுதி சனிக்கிழமைகளில் 14 மணி முதல் 15 மணி வரை நடைபெறும். ஆர்வம் உடையவர்கள் பங்குகொண்டு பயன்பெறலாம்.)
மகளிரணி நடத்தும் திருக்குறள் அரங்கம்!
மகளிரணி நடத்தும் திருக்குறள் அரங்கம்!
கடந்த 29-01-2011 சனிக்கிழமை பிற்பகல் மூன்று மணிக்கு, கார்ழ் லே கொனேசு,கம்பன் இல்லத்தில்,திருமதி சரோசா தேவராசு அவர்கள் இறைவணக்கம்,தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல்கள் பாட இனிதே தொடங்கியது. இவ்வரங்கில், திருக்குறள் துறவறவியல், 25 ஆம் அதிகாரம் அருளுடைமை முதல் 30 ஆம் அதிகாரம் வாய்மை வரை 60 குறட்பாக்கள், பங்குபெற்ற அனைவராலும் ஒருமித்த குரலில் படிக்கப்பட்டன ஓரத்திகாரத்திற்கு ஒருவரா ஆறு பேர்கள் சிறப்பாக விளக்கம் அளித்தார்கள்.
அருளுடைமை ----- பேரா. லெபோ பெஞ்சமின்.
புலால் மறுத்தல் ----- திருமதி சரோசா தேவரசு
தவம் ----- திருமிகு கி. அசோகன்
கூடாவொழுக்கம்------ திருமதி தனசெல்வி தம்பி
கள்ளாமை ------ திருமிகு வே. தேவராசு
வாய்மை ------ திருமிகு சிவ.சிவகுமார்
அரங்கத்தில் கலந்துகொண்டவர்கள்:-
திருவாளர்கள்: கி.பாரதிதாசன், ச.விசயரத்தினம், கு.கனகராசா, தணிகாசமரசம், பழ.சிவஹரி, தே பால்ராசு லிங்கம் செயமாமல்லன், தணிகைநாத சர்மா, பாமல்லன், தமிழ்வாணன், இராமகிருட்டிணன், கண.கபிலனார், ஆதிஞானவேல், பற்குனராசா, கோபால்.பார்த்தசாரதி, செயசீலன் , நாகராசன், தம்பி மார்க்.
திருமதியர்: இராசேசுவரி சிமோன், அருணா செல்வம், ஆதிலட்சுமி வேணுகோபால், கோமதி சிவஹரி, சுகுணா சமரசம், தமிழ் மலர், குணசுந்தரி பாரதிதாசன், பிரபாவதி அசோகன், இரத்தினமாலா இராமகிருட்டிணன் ஆகியோராவர்.
தேநீர் விருந்தோம்பலுக்குப்பின், சங்க இலக்கியத்தில் தாய்மை என்னும் தலைப்பில், லியோன் நகரிலிருந்து வருகை புரிந்த கவிஞர் பாமல்லன் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள். அதைத்தொடர்ந்து, கவிமாலை நிகழ்ச்சியில், பொங்குகவே! என்னும் தலைப்பில் கம்பன் கழகக்கவிஞர்கள்: சரோசா தேவராசு, அருணா செல்வம், வே.தேவராசு, பாமல்லன் ஆகியோர் கவிதைகளை வழங்கினர்.பின்னர், இரவுச் சிற்றுண்டி விருந்தோம்பலுடன் நிகழ்ச்சிகள் இனிதே நிறைவேறின.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
நிகழ்வுகள்
குறளரங்கம் 7
கோப்புகள்
தெள்ளு தமிழ்நடை,
சின்னஞ் சிறிய இரண்டடிகள்,
அள்ளு தொறுஞ்சுவை
உள்ளுந் தொறும்உணர் வாகும்வண்ணம்
கொள்ளும் அறம்,பொருள்
இன்பம் அனைத்தும் கொடுத்ததிரு
வள்ளுவ னைப்பெற்ற
தாற்பெற்ற தேபுகழ் வையகமே!
வெல்லாத இல்லை
திருவள் ளுவன்வாய் விளைத்தவற்றுள்
பொல்லாத தில்லை
புரைதீர்ந்த வாழ்வினி லேஅழைத்துச்
செல்லாத தில்லை
பொதுமறை யான திருக்குறளில்
இல்லாத தில்லை
இணையில்லை முப்பாலுக் கிந்நிலத்தே!
தொன்னூற் படியில்லை!
திராவிடர் தூய கலைஒழுக்கம்
பின்னூற் படியிற்
பெரும்படி இல்லை! பிழைபடியா
அந்நூற் படிதிரு
வள்ளுவன் தந்தனன் ஆயிரத்து
முந்நூற்று முப்பதும்
முத்தாக மூன்று படியளந்தே!
கன்னல் இதுஎனக்
காட்டியே மக்கள் கடித்துணுமோர்
இன்னல் தராது
பருகுக சாறென ஈவதுபோல்
பின்னல் அகற்றிப்
பிழைதீர் நெறிஇது பேணிர்என்றே
பன்னல் உடையது
வள்ளுவன் முப்பாற் பனுவலொன்றே!
வித்திப் பிழைக்கும்
உழவனும் வேந்தனும் நாடனைத்தும்
ஒத்துப் பிழைக்க
வழிகாட்டி வள்ளுவன் ஓதியநூல்.
எத்துப் பழுத்தவர்
ஏமாற்றும் ஆரியர் நான்மறைபோல்
அத்திப் பழமன்று;
தித்திக்கும் முப்பழம் ஆம்படிக்கே!
-பாவேந்தர் பாரதிதாசன்
பக்க எண்ணி
Blogger இயக்குவது.