குறளரங்க இணையதளத்திற்கு உங்களை இனிதே வரவேற்கிறோம்
1/12/2011

திருக்குறள் அரங்கம் - 7

அன்புடையீர்!  அருந்தமிழ்ப்  பற்றுடையீர்! வணக்கம்!

கடந்த 29-01-2011 சனிக்கிழமை  பிற்பகல் இரண்டு  மணிக்கு, பிரான்சு  கார்ழ் லே கொனேசு  கம்பன் இல்லத்தில் கம்பன் கழகம் நடத்தும் மரபுக்கவிதை பயிற்சிப் பட்டறை சிறப்பாக நடைபெற்றது. இதில் கம்பன்  கழகத்  தலைவர் கவிஞர் கி. பாரதிதாசன் அவர்கள் மரபுக் கவிதை இலக்கணம் நடத்தினார். திருவாளர்கள்; கி.அசோகன்,பழ.சிவஹரி,தணிகா சமரசம், சிவ.சிவகுமார்,  ஆதிஞானவேல், தணிகைநாத சர்மா,   பால்ராஜ் தேவராசு, லிங்கம் செயமாமல்லன், கோபால் பார்த்தசாரதி, திருமதியர்;, கோமதி சிவஹரி, சுகுணா சமரசம், ஆதிலட்சுமி வேணுகோபால், தனசெல்வி தம்பி, பிரபாவதி அசோகன் ஆகியோர் பயிற்சியாளர்களாகக் கலந்துகொண்டனர்.
( இவ்விலக்கண வகுப்பு திங்கள்தோறும் இறுதி சனிக்கிழமைகளில் 14 மணி முதல்  15 மணி வரை  நடைபெறும். ஆர்வம் உடையவர்கள் பங்குகொண்டு பயன்பெறலாம்.)

மகளிரணி  நடத்தும்  திருக்குறள்  அரங்கம்!

கடந்த 29-01-2011  சனிக்கிழமை பிற்பகல்  மூன்று மணிக்கு, கார்ழ் லே கொனேசு,கம்பன் இல்லத்தில்,திருமதி சரோசா தேவராசு அவர்கள் இறைவணக்கம்,தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல்கள் பாட  இனிதே தொடங்கியது.  இவ்வரங்கில், திருக்குறள் துறவறவியல், 25 ஆம் அதிகாரம் அருளுடைமை  முதல் 30 ஆம்  அதிகாரம் வாய்மை வரை 60 குறட்பாக்கள், பங்குபெற்ற அனைவராலும் ஒருமித்த குரலில் படிக்கப்பட்டன  ஓரத்திகாரத்திற்கு ஒருவரா ஆறு பேர்கள் சிறப்பாக விளக்கம் அளித்தார்கள்.

அருளுடைமை ----- பேரா. லெபோ பெஞ்சமின்.
புலால் மறுத்தல் -----   திருமதி சரோசா தேவரசு
தவம் -----  திருமிகு கி. அசோகன்
கூடாவொழுக்கம்------  திருமதி தனசெல்வி தம்பி
கள்ளாமை ------  திருமிகு வே. தேவராசு
வாய்மை ------  திருமிகு சிவ.சிவகுமார்

அரங்கத்தில்  கலந்துகொண்டவர்கள்:-

திருவாளர்கள்: கி.பாரதிதாசன், ச.விசயரத்தினம், கு.கனகராசா, தணிகாசமரசம், பழ.சிவஹரி, தே பால்ராசு லிங்கம் செயமாமல்லன், தணிகைநாத சர்மா, பாமல்லன், தமிழ்வாணன், இராமகிருட்டிணன்,  கண.கபிலனார், ஆதிஞானவேல், பற்குனராசா, கோபால்.பார்த்தசாரதி, செயசீலன் , நாகராசன், தம்பி மார்க்.

திருமதியர்: இராசேசுவரி சிமோன், அருணா செல்வம், ஆதிலட்சுமி வேணுகோபால், கோமதி சிவஹரி, சுகுணா சமரசம், தமிழ் மலர், குணசுந்தரி பாரதிதாசன், பிரபாவதி அசோகன், இரத்தினமாலா இராமகிருட்டிணன் ஆகியோராவர்.


தேநீர் விருந்தோம்பலுக்குப்பின், சங்க இலக்கியத்தில் தாய்மை என்னும் தலைப்பில், லியோன் நகரிலிருந்து வருகை புரிந்த கவிஞர் பாமல்லன் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள். அதைத்தொடர்ந்து, கவிமாலை நிகழ்ச்சியில், பொங்குகவே! என்னும் தலைப்பில் கம்பன் கழகக்கவிஞர்கள்: சரோசா தேவராசு, அருணா செல்வம், வே.தேவராசு, பாமல்லன் ஆகியோர்  கவிதைகளை வழங்கினர்.பின்னர், இரவுச் சிற்றுண்டி விருந்தோம்பலுடன் நிகழ்ச்சிகள் இனிதே நிறைவேறின.

செய்தித் தொகுப்பு  கவிஞர். வே.தேவராசு மற்றும் சரோசா தேவராசு அவர்கள். 

0 கருத்துகள்:

குறளரங்கம் 7
கோப்புகள்


தெள்ளு தமிழ்நடை,
சின்னஞ் சிறிய இரண்டடிகள்,
அள்ளு தொறுஞ்சுவை
உள்ளுந் தொறும்உணர் வாகும்வண்ணம்
கொள்ளும் அறம்,பொருள்
இன்பம் அனைத்தும் கொடுத்ததிரு
வள்ளுவ னைப்பெற்ற
தாற்பெற்ற தேபுகழ் வையகமே!

வெல்லாத இல்லை
திருவள் ளுவன்வாய் விளைத்தவற்றுள்
பொல்லாத தில்லை
புரைதீர்ந்த வாழ்வினி லேஅழைத்துச்
செல்லாத தில்லை
பொதுமறை யான திருக்குறளில்
இல்லாத தில்லை
இணையில்லை முப்பாலுக் கிந்நிலத்தே!

தொன்னூற் படியில்லை!
திராவிடர் தூய கலைஒழுக்கம்
பின்னூற் படியிற்
பெரும்படி இல்லை! பிழைபடியா
அந்நூற் படிதிரு
வள்ளுவன் தந்தனன் ஆயிரத்து
முந்நூற்று முப்பதும்
முத்தாக மூன்று படியளந்தே!

கன்னல் இதுஎனக்
காட்டியே மக்கள் கடித்துணுமோர்
இன்னல் தராது
பருகுக சாறென ஈவதுபோல்
பின்னல் அகற்றிப்
பிழைதீர் நெறிஇது பேணிர்என்றே
பன்னல் உடையது
வள்ளுவன் முப்பாற் பனுவலொன்றே!

வித்திப் பிழைக்கும்
உழவனும் வேந்தனும் நாடனைத்தும்
ஒத்துப் பிழைக்க
வழிகாட்டி வள்ளுவன் ஓதியநூல்.
எத்துப் பழுத்தவர்
ஏமாற்றும் ஆரியர் நான்மறைபோல்
அத்திப் பழமன்று;
தித்திக்கும் முப்பழம் ஆம்படிக்கே!

-பாவேந்தர் பாரதிதாசன்

பக்க எண்ணி

Blogger இயக்குவது.