குறளரங்க இணையதளத்திற்கு உங்களை இனிதே வரவேற்கிறோம்
4/13/2011

திருக்குறளரங்கம் - 9

அன்புடையீர்!  அருந்தமிழ்ப்   பற்றுடையீர்!  வணக்கம்!
                         பிரான்சு    கம்பன்   கழகம்  நடத்தும்  "மரபுக்   கவிதை"  எழுதும்   பயிற்சிப்   பட்டறையும்,  கம்பன்  மகளிரணி  நடத்தும்   குறளரங்கம்,  கவிதையரங்கம்   மற்றும்  " சிறப்புச்   சொற்பொழிவு   ஆகிய   நிகழ்வுகள்,  பிரான்சு   கம்பன்   கழகத்தின்  தலைவர்   திரு.கி.பாரதிதாசன்   அவர்கள்  இல்லத்தில்,  கடந்த  30.4.2011 சனிக்கிழமை   பிற்பகல்  இரண்டு  மணிமுதல்  இரவு  ஏழு  மணிவரை  மிகச்  சிறப்பாக   நடந்தேறியது.  
தமிழ்  மரபுக்கவிதைப்  பயிற்சிப்  பட்டறை:-
                         தமிழில்  மரபுக்  கவிதை  எழுதுவதற்கான  அடிப்படை   இலக்கணத்தைக்   கம்பன்  கழகத்  தலைவர்   கவிஞர்.திரு.கி.பாரதிதாசன்   அவர்கள்  நடத்த,  திருவாளர்கள்:  தணிகா  சமரசம்,  பழ.  சிவஅரி,  த.சிவப்பிரகாசம்,  கி.தணிகைவேல்,  இரா.தணிகைநாத சர்மா,  கி அசோகன்,  லிங்கம் செயமாமல்லன்,  சிவ.சிவகுமார்,  ஆதி  ஞானவேல்,  சு.மதிவாணன்;  திருமதியர்:  ஆதிலட்சுமி  வேணுகோபால்,   கோமதி  சிவஅரி,  சுகுணா  சமரசம், பிரபா  அசோகன் ஆகியோர்  பயிற்சியாளர்களாகக்   கலந்து  கொண்டுப்  பயன்  பெற்றனர்.
இலக்கண வகுப்பைத்  தொடர்ந்து,  மகளிரணி  நிகழ்வுகள்  தொடங்கின.
குறள்அரங்கம்:-
                          இன்றைய  ஒன்பதாம்  குறள்அரங்கம்   நிகழ்ச்சியில் அறத்துப்பால்  துறவறவியலில்  கடைசி   மூன்று  அதிகாரங்களும்  பொருட்பாலின்  முதல்  இரண்டு  அதிகாரங்களும்,  வந்திருந்த  அனைவராலும்  ஒருமித்த   குரலில்   படிக்கப்பட்டுப  பின்னர்  ஐவரால்  விளக்கமளிக்கப்  பட்டன.
விளக்கவுரை  அளித்தவர்கள்:
36  ஆம் அதிகாரம்  மெய்யுணர்தல்--------- திருமதி.  ஆதிலட்சுமி  வேணுகோபால்
37 ஆம்   அதிகாரம்  அவா அறுத்தல்--------திருமிகு. த. சிவப்பிரகாசம்
38  ஆம்  அதிகாரம்  ஊழ் ---------------------- திருமிகு.ஆதி  ஞானவேல்
39  ஆம்   அதிகாரம்  இறை மாட்சி ----------திருமிகு.தணிகைநாத  சர்மா
40 ஆம்   அதிகாரம்  கல்வி--------------------திரு
மிகு.அ.நாகராசு
  தேநீர்  விருந்திற்குப்   பிறகு  "கவிதையரங்கம்" நடைபெற்றது.
கவிதையரங்கம்:-
தலைப்பு:  "காதல்"
                        கவிஞர்.திருமிகு.கி.பாரதிதாசன் அவர்கள்  தலைமையில்  கவிதைமலர்  வழங்கியோர்: கவிஞர்கள்;  தணிகா சமரசம்,   த. சிவப்பிரகாசம்,  கோமதி சிவஅரி,   பழ  சிவஅரி   லிங்கமசெயமாமல்லன்,   ஆதிலட்சுமி வேணுகோபால்,   சரோசா தேவராசு,  தேவராசு,   அருணா செல்வம்,  கி.பாரதிதாசன்,  தே.பால்ராசு  ஆகியோர்  ஆவர்.  இகவிதை  அரங்கில்  பங்கேற்ற   பதினோரு   கவிஞர்களும்   மிகச்  சிறப்பான  கவிகளை வழங்கினர்..   கவிதையரங்க்கைத்  தொடர்ந்து  "சிறப்புச்  சொற்பொழிவு "    நடைபெற்றது.
சிறப்புச்  சொற்பொழிவு:-
                         கம்பன்  கழகத்தின்  பொருளாளர்  திருமிகு.  தணிகா  சமரசம்  அவர்கள்  "இரத்தம்  காட்டும்  உண்மைகள்"  என்னும்  தலைப்பில்  மிகச்  சிறப்பானதொரு   சொற்பொழிவினை  ஆற்றினார்.  இதில்  இரத்தத்தைப்  பற்றிப்  பொதுவாக   நமக்குத்  தெரிந்திராத  பல  அரிய  செய்திகளைப்   பற்றி  விளக்கமாக  எடுத்துரைத்தார்.   தேர்ந்த  ஞானம்  உடைய  ஒரு  மருத்துவரைப்போல்  அவர்  விளக்கமளித்த  முறை   எல்லோரும்  புரிந்து  கொள்ளும்படி    மிகத் தெளிவாக  அமைந்திருந்தது  என்பது  குறிப்பிடத்  தக்கது.  செவிக்கான  உணவைச்  சுவைத்த பிறகு,  வயிற்றுககான இரவுச்  சிற்றுண்டி  விருந்துடன்  மகளிரணி   நிகழ்வுகள்  யாவும்  இனிதே  நிறைவேறின.     நிகழ்வுகளில்  35  பேர்கள்  கலந்து  கொண்டுச்    சிறப்புச்  சேர்த்தனர்.
 அனைவருக்கும்  எமது  மனமார்ந்த  நன்றியையும்   பாராட்டுக்களையும்  தெரிவித்துக்  கொள்கின்றோம்.
                                                                                                                                  
                                                                                                                                      
சரோசா தேவராசு

0 கருத்துகள்:

குறளரங்கம் 7




கோப்புகள்


தெள்ளு தமிழ்நடை,
சின்னஞ் சிறிய இரண்டடிகள்,
அள்ளு தொறுஞ்சுவை
உள்ளுந் தொறும்உணர் வாகும்வண்ணம்
கொள்ளும் அறம்,பொருள்
இன்பம் அனைத்தும் கொடுத்ததிரு
வள்ளுவ னைப்பெற்ற
தாற்பெற்ற தேபுகழ் வையகமே!

வெல்லாத இல்லை
திருவள் ளுவன்வாய் விளைத்தவற்றுள்
பொல்லாத தில்லை
புரைதீர்ந்த வாழ்வினி லேஅழைத்துச்
செல்லாத தில்லை
பொதுமறை யான திருக்குறளில்
இல்லாத தில்லை
இணையில்லை முப்பாலுக் கிந்நிலத்தே!

தொன்னூற் படியில்லை!
திராவிடர் தூய கலைஒழுக்கம்
பின்னூற் படியிற்
பெரும்படி இல்லை! பிழைபடியா
அந்நூற் படிதிரு
வள்ளுவன் தந்தனன் ஆயிரத்து
முந்நூற்று முப்பதும்
முத்தாக மூன்று படியளந்தே!

கன்னல் இதுஎனக்
காட்டியே மக்கள் கடித்துணுமோர்
இன்னல் தராது
பருகுக சாறென ஈவதுபோல்
பின்னல் அகற்றிப்
பிழைதீர் நெறிஇது பேணிர்என்றே
பன்னல் உடையது
வள்ளுவன் முப்பாற் பனுவலொன்றே!

வித்திப் பிழைக்கும்
உழவனும் வேந்தனும் நாடனைத்தும்
ஒத்துப் பிழைக்க
வழிகாட்டி வள்ளுவன் ஓதியநூல்.
எத்துப் பழுத்தவர்
ஏமாற்றும் ஆரியர் நான்மறைபோல்
அத்திப் பழமன்று;
தித்திக்கும் முப்பழம் ஆம்படிக்கே!

-பாவேந்தர் பாரதிதாசன்

பக்க எண்ணி

Blogger இயக்குவது.